/* */

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட பெண், நள்ளிரவு கைது

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட பெண்ணை நள்ளிரவில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட பெண், நள்ளிரவு கைது
X

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட பெண் நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் என்னும் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அவர் அத்துமீறி பாலியல் சீண்டலில் நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் நேற்றைய முன் தினம் சிவசங்கர்பாபாவை கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணைக்குப்பின் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு கிளைச்சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சிவசங்கர்பாபாவிடம் மேற்கொண்ட விசாரணைக்குப்பின் சுஸ்மிதா என்ற பெண்ணை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி முன்பு நள்ளிரவில் ஆஜர் படுத்தினர்.

பின்னர் அப்பெண்ணை வருகின்ற 2 ஆம் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

சிவசங்கர்பாபாவை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து இரண்டு நாட்கள்கூட ஆகாத நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில்,

அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண்ணையும் அவரது பச்சிளம் குழந்தையுடன் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது நீதிபதிமுன்பு ஆஜர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 Jun 2021 6:11 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை