/* */

கொரோனா நோயாளிகள் மன உளைச்சலில் இருந்து மீள்வது எப்படி?

மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் மன உளைச்சலில் இருந்து மீள்வது எப்படி என்று மனநல மருத்துவரின் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

கொரோனா நோயாளிகள்  மன உளைச்சலில் இருந்து மீள்வது எப்படி?
X

கோப்பு காட்சி

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகம் (வயது 56) என்கிற திருப்போரூர் பகுதியை சேர்ந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில் அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு கொரொனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று மருத்துவமனை மொட்டை மாடியில் குடிநீர் பைப்பில் அணிந்திருந்த துணியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அதேபோல் , சின்ன காஞ்சிபுரம் வரதப்பா நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 54),என்கிற கட்டிடங்கள் கட்டும் பணி செய்து வரும் தொழிலாளி, கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு காஞ்சிபுரம் அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் அச்சம் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து யாரும் கவனிக்காத நேரத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மட்டும் இதுவரை 15க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 50 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் தான் அதிக அளவு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் சதீஷ் குமார் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மன தைரியத்துடன் இருத்தல் அவசியம். தனிமைபடுத்திக் கொண்டு தனியாக இருப்பதும், அதேபோல உறவினர்களை பிரிந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதும் மனதளவில் சோர்வை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேபோல் முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலையில் வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்து இருப்பதால் நோயாளிகள் மனதளவில் சோர்வடைய வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக வயதானவர்கள் தனிமையாக இருப்பது இது போன்ற அசாதாரண சூழலில் மருத்துவமனையில் இருப்பது ஆகியவை மனச்சோர்வை ஏற்படுத்தும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆரம்ப கட்டத்தில் அவர்களுடன் உரையாடி அவர்கள் மன அழுத்தத்தை போக்கி வந்தனர். ஆனால் தற்போது பல மருத்துவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது, அதேபோல அதிக அளவு நோயாளிகள் வருகின்ற காரணத்தினால் நீண்ட நேரம் அந்த உரையாடல்களையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு வருமானம் இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களினாலும் பொதுமக்களுக்கு தற்போது மன உளைச்சல் ஏற்பட்டு வருகிறது. ஆனால் கடந்த வைரஸ் தொற்றின் போது இருந்த பயம் தற்போது தேவை இல்லை. ஏன் என்றால் முதலில் நம்மிடம் எந்த ஆயுதமும் இல்லாமல் இந்நோயை நாம் எதிர் கொண்டோம், ஆனால் தற்போது நம்மிடம் தடுப்பூசி உள்ளது . அதேபோல் பல மாத்திரைகள் வைரஸ் தொற்றை குறைகிறது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமே தவிர அதீத பயம் இருத்தல் கூடாது.

வைரஸ் தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு நிச்சயம் என்பதெல்லாம் கிடையாது .எந்த நோயாக இருந்தாலும் உயிர் இழப்பு என்பது இருக்கிறது. அதேபோல் தான் இந்த நோய்க்கும் உயிரிழப்பு உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஏராளமானோர் குணமாகியுள்ளனர். அவர்களை மனதில் நினைத்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அதிக நேர்மறையான எண்ணங்கள் பரவும். எனவே எதிர்மறை எண்ணங்களை கைவிட வேண்டும்.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களை நம்ப வேண்டாம். அரசு சார்பில் அங்கீகரிக்கப்பட்ட தகவல்களை மட்டும் நம்புங்கள். அரசு சார்பில் உலக சுகாதார நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட மருந்துகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது அந்த மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி எடுத்துக் கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

கொரோனா வைரஸ் தொற்று வந்தால் ஆக்சிஜன் தேவை என்பது கிடையாது. ஆக்சன் குறையும் நோயாளிகளுக்கு இறுதி கட்டத்தில் மட்டுமே தேவைப்படுகிறது .அதை மனதில் வைத்துக்கொண்டு பதற்றம் இல்லாமல் இருந்தால் நிச்சயம் வைரஸ் தொற்றில் இருந்து எளிதாக மீண்டு விடலாம் என்கிறார் மனநல மருத்துவர் சதீஷ் குமார்.

தேவையான மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சார்பில் பிரத்யேகமான தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. தெ 7200953536 இதில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண் மூலம் மன உளைச்சலில் இருப்பவர்கள் பயன் அடையாளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 May 2021 12:20 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  2. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  5. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  6. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  8. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  9. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  10. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!