/* */

அரியலூர் மாவட்டத்தில் குளம், ஏரிகளில் இலவசமாக மண் எடுத்துச் செல்ல அனுமதி

அரியலூர் மாவட்டத்தில் குளம், ஏரிகளில் வண்டல் மண், சவுடுமண், இலவசமாக மண் எடுத்துச் செல்ல மாவட்ட கலெக்டர் அனுமதி

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் குளம், ஏரிகளில் இலவசமாக மண் எடுத்துச் செல்ல அனுமதி
X

பைல் படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959, விதி எண் 12(2)-இன்படி அரியலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 92 ஏரிகள் (ஒருநீர்த்தேக்கம் உள்பட) மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 454 குளம், ஏரிகளில் மட்டும் வண்டல் மண், சவுடுமண், கிராவல் மண் போன்ற கனிமங்களை வேளாண் உபயோகம், சொந்த வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் தயாரித்தல் ஆகிய காரியங்களுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கும் பொருட்டு, அரியலூர் மாவட்ட அரசிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள், விவசாயிகள் மண்பாண்டம் தயாரிப்பு மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டம் 1983-இன்படி பதிவு செய்யப்பட்ட மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் ஆகியோரிடமிருந்து அரியலூர் மாவட்ட அரசிதழில் குறிப்பிட்ட ஏரிகளிலிருந்து மட்டும், வண்டல் மண், சவுடுமண், கிராவல் மண் போன்ற கனிமங்களை இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதிகோரி சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் விண்ணப்பிக்கலாம். மேற்படி விண்ணப்பங்கள் மீது சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களால் உடன் விசாரணை மேற்கொண்டு வண்டல் மண் எடுத்து செல்ல உரிய அனுமதி வழங்கப்படும்.

மேலும், அனுமதி கோரும் மனுதாரரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலமும், வெட்டி எடுக்கப்பட வேண்டிய இடமும் ஒரே வருவாய் கிராமத்தில் அல்லது அருகில் உள்ள வருவாய் கிராமத்தில் இருக்க வேண்டும். விவசாய பணிக்கெனில், நஞ்சை நிலமாகயிருப்பின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருஏக்கருக்கு 75 கனமீட்டர் அல்லது 25 டிராக்டர் லோடுகளும், புஞ்சை நிலமாகயிருப்பின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடுகளும், சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கனமீட்டர் அல்லது 10 டிராக்டர் லோடுகளும், மண்பாண்டம் தயாரித்தலுக்கு 60 கனமீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடுகளும் இலவசமாக மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும்.

மேலும், வேளாண் உபயோகத்திற்கு நிலத்திற்கான கணினி சிட்டா நகலும், வீட்டு உபயோகத்திற்கு வீட்டிற்கான நத்தம், கணினி சிட்டா நகலும், மண்பாணை தயாரிப்பு உபயோகத்திற்கு நலவாரிய அடையாள அட்டை நகலும் மற்றும் வசிப்பிட முகவரிக்கு ஆதாரமாக குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகலினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 10 May 2022 2:04 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  7. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  8. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா