/* */

இயந்திரங்களை தற்செயல் தெரிவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி

இரண்டாம் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தற்செயல் தெரிவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி

HIGHLIGHTS

இயந்திரங்களை தற்செயல் தெரிவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி
X

இரண்டாம் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தற்செயல் தெரிவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில், சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி வாரியாக பயன்படுத்தப்பட வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் இரண்டாம் கட்டமாக தற்செயல் தெரிவு முறையில் ஒதுக்கீடும் செய்யும் பணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.ரத்னா தலைமையில், அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் பரத் யாதவ், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சி.சத்யபாமா ஆகியோர் முன்னிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் த.ரத்னா தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை யொட்டி, போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளை கணினி மூலம் ஒதுக்கீடும் செய்யும் பணி இரண்டாம் கட்டமாக நடைபெற்றது.

வாக்குப்பதிவின் போது இயந்திரங்கள் பழுதுகள் ஏற்படின், அதனை நிவர்த்தி செய்திடும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கண்ட ஓதுக்கீட்டில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 20 சதவிகிதம் கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களும், 28 சதவிகிதம் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் கூடுதலாக ஓதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 20 சதவீத இருப்புடன் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 376 வாக்குச்சாவடி மையங்களுக்கு 452 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 452 கட்டுப்பாட்டு கருவிகளும் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவி 28 சதவீத இருப்புடன் 482 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 377 வாக்குச்சாவடி மையங்களுக்கு 453 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 453 கட்டுப்பாட்டு கருவிகளும் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவி 28 சதவீத இருப்புடன் 483 இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் ஏழுமலை (அரியலூர்), அமர்நாத் (உடையார்பாளையம்), வட்டாட்சியர் அமுதா (தேர்தல்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசு கட்சி பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

Updated On: 27 March 2021 1:36 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...