/* */

அரியலூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு

அரியலூர் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டார்.

HIGHLIGHTS

அரியலூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல்  வெளியீடு
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டார்.


அரியலூர் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2021-க்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (09.12.2021) வெளியிட்டார்.

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2021-க்கான 2 நகராட்சிகள், 2 பேரூராட்சிகளுக்கான வாக்காளர்கள் பட்டியல்கள் முறையே அரியலூர் நகராட்சியில் 11579 ஆண் வாக்காளர்கள், 12627 பெண் வாக்காளர்கள், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 13270 ஆண் வாக்காளர்கள், 14262 பெண் வாக்காளர்கள், உடையார்பாளையம் பேரூராட்சியில் 4888 ஆண் வாக்காளர்கள், 4994 பெண் வாக்காளர்கள், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 3435 ஆண் வாக்காளர்கள், 3640 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

அதன்படி அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட 2 நகராட்சிகள் மற்றும் 2 பேரூராட்சிகளில் 33172 ஆண் வாக்காளர்கள், 35523 பெண் வாக்காளர்கள் ஆக மொத்தம் 68695 வாக்காளர்கள் அடங்கிய வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகு, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 9 Dec 2021 8:10 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது