/* */

100சதவீத கொரோனா தடுப்பூசி இலக்கினை எட்டிய இரண்டு கிராம ஊராட்சிகள்

அரியலூர் மாவட்டத்தில் கவரப்பாளையம், மேலணிக்குழி கிராம ஊராட்சிகள் 100சதவீத கொரோனாதடுப்பூசி செலுத்தி இலக்கினை எட்டியுள்ளது

HIGHLIGHTS

100சதவீத கொரோனா தடுப்பூசி இலக்கினை எட்டிய  இரண்டு கிராம ஊராட்சிகள்
X

அரியலூர் ஊராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 2 ஊராட்சிகள் 100 சதவீத இலக்கினை எட்டியுள்ளன.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதில் சுபகவரப்பாளையம், மேலணிக்குழி ஆகிய இரண்டு கிராம ஊராட்சிகள் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளன.

அரியலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 201 கிராம ஊராட்சிகளில் உள்ள 710 குக்கிராமங்களில் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி 100 சதவீத கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் போட்டு 100 சதவீதம் நிறைவு என்ற இலக்கை எட்டும் நோக்கில் அனைத்து ஊரக பகுதிகளிலும் ஊரக வளர்ச்சி துறை மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள்) வட்டார அளவிலான ஊரக வளர்ச்சி அலுவலர்கள் (ஊராட்சி செயலாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்) மற்றும் சுகாதார அலுவலர்கள் (வட்டார மருத்துவ அலுவலர், செவிலியர்கள் ஏனைய உதவியாளர்கள்) ஆகியோரின் தீவிர முயற்சியால், அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் ஊராட்சி ஓன்றியம், கவரப்பாளையம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஓன்றியம், மேலணிக்குழி ஆகிய 2 கிராம ஊராட்சிகள் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமங்கள் என்ற இலக்கை எட்டியுள்ளன.

ஆண்டிமடம் ஊராட்சி ஓன்றியம் கவரப்பாளையம் கிராம ஊராட்சியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 1397 பேரில் 1345 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏனைய 52 பேரில் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 20 பேர் உடல் ரீதியான நாள்பட்ட நோய்கள் காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் தடுப்பூசி செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஓன்றியம், மேலணிக்குழி கிராம ஊராட்சியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 2766 பேரில் 2755 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏனைய 11 பேருக்கு அறுவை சிகிச்சை, உடல் ரீதியான நாள்பட்ட நோய்கள் காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் தடுப்பூசி செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கிராம ஊராட்சிகள் 100 சதவீத கொரோனா தடுப்பூசி நிறைவு செய்ததற்காக, ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துகுமாரசாமி (மேலணிக்குழி), கவரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சேரநாதன் மற்றும் அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இபோல், அனைத்து கிராம ஊராட்சிகளும் 100 சதவீதம் இலக்கினை அடைய வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் சுகாதார துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் முழுமூச்சில் ஈடுபட்டு அனைத்து நிலை அலுவலர்களும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டு இலக்கை அடைவதற்கு பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தகவல் தெரிவித்தார்.

Updated On: 25 Aug 2021 5:53 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது