/* */

புத்துணர்ச்சியூட்டும் காலை நேரம் குதுாகலத்துடன் குட்மார்னிங்க....சொல்லுங்க

Good Morning Quotes in Tamil-காலை நேரம் என்பது அனைவருக்கும் மிக முக்கியமான நேரம். பல வேலைகள் இருக்கும்.இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் சோஷியல் மீடியா குட்மார்னிங் பெரும்பங்கு வகிக்கிறது.

HIGHLIGHTS

Good Morning Quotes in Tamil
X

Good Morning Quotes in Tamil

Good Morning Quotes in Tamil

இன்றைய வாழ்க்கை முறையில் அனைவருமே நாள் முழுக்க டென்ஷன்...டென்ஷன்...டென்ஷன்.. காலையில் படுக்கையில் இருந்து எழுந்தது முதல் படுக்கைக்கு செல்லும் வரை பரபரப்பாகவே வாழ வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.சொல்லப்போனால் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாதவர்களின் லி்ஸ்ட் எடுத்தால் அது மாளாது. அந்த வகையில் அவர்களுக்கு நாள் முழுக்க வேலைகள் வரிசையாக காத்திருக்கின்றன. அதுவும் கம்ப்யூட்டர் மூலம் செய்யக்கூடிய வேலைகளை மட்டும் சொல்லவே வேணாம்.நாம் நன்றாக இருக்கும்போது அது வேலை செய்யாது. அது வேலை செய்யும்போது நாம் அந்த வேலையினை செய்யமுடியாது. இதுதாங்க பிரச்னை... அப்புறம் ஏங்க உங்களுக்கு பிரஷர் ஏறாது.

சாதாரணமாக கையினால் எழுதும் காலத்தினை விட தற்போது கம்ப்யூட்டர் வந்தபின் வேலைகள் பெரும்தாமதமாகிறது. பேங்குக்கு போங்க... சர்வர் பிராப்ளம்.. சிஸ்டம் ஸ்லோ என்ற பதில்தான் வருது... 10 நிமிட வேலை என சென்றால் பல மணி நேரமாகிவிடுகிறது. இது போன்ற டென்ஷன்தாங்க பலருக்கும்...

மனிதனுக்கு நிம்மதி எப்போது கிடைக்கும் தெரியுமா? அவர்கள் இரவில் நல்லஉறக்கம் உறங்கும்போதுதாங்க. அதிலும் பலருக்கு போன்மேல் போன் வந்து துாங்கவிடாமல் செய்து விடுவதும் உண்டு. சரிங்க... நாள் முழுக்க பிரச்னையோடுதான் வாழறோம். காலையில் எழுந்திருக்கும்போது அமைதி கிடைக்குமா? ஆமாங்க... ஒருசிலர் அனுப்பும் காலைவணக்கம் மெசேஜ் ஐ பார்க்கும்போது மனம் அமைதியுறுகிறது. ஆனால் ஒரு சிலர் அதற்கும் பதில் அளிக்க மாட்டார்கள். சரி அவருக்கு என்னவோ பிரச்னை போல என இருந்துவிடுவோரும் உண்டு. அவர் ஏன் நமக்கு பதில் குட்மார்னிங் மெசேஜ் போடவில்லை என குழம்பிபோவோரும் உண்டு.

அதிகாலையில் பிரம்மமுகூர்த்தத்தில் செய்யப்படும் காரியங்கள் நிச்சயம் வெற்றியை மட்டுமே தரும். அதனால்தான் பிள்ளைகளை காலை நேரத்தில் எழுந்து படிக்க சொல்லுங்கள்... என சொல்கிறார்கள். மனம் அமைதியுடன்இருக்கும்போது படிப்பது மனதில் நன்கு பதியும். ஓசோன் காற்று சுற்றுப்புற அமைதி என பல பாசிடிவ் கருத்துகள் உள்ளன.

சரிங்க..... உங்களுக்கு யாராவது ஒருவராவது சோஷியல் மீடியாவில் காலை வணக்கம் சொல்வதுண்டா... வாங்க பார்க்கலாம்.

புதிய மற்றும் வெற்றிகரமான நாளைத் துவங்க இனிய காலை துாய காற்று

விதையோ வினையோ விதைத்தவனுக்கு அதற்கான பலன் நிச்சயமுண்டு...காலை வணக்கம்

நேற்று ஒரு நல்லநாள் என்றால் நிறுத்த வேண்டாம். ஒரு வேளை உங்கள் வெற்றியின் தொடக்கம் தொடங்கியிருக்கலாம்... வணக்கம்

இந்த கணம்தான் உண்மை. இதைத்தவிர்த்து மற்றவை அனைத்தும் நினைவுகளும் கற்பனையும் தான்.

தோல்வி என்பது வெற்றிக்கு நேர்மாறானது அல்ல. ஆனால் அதன் ஒரு பகுதி மட்டுமே அதை எப்போதும் நினைவில் கொள்ளுங்க...

வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் நாம் எங்கு நிற்கிறோம் என்பதல்ல.. எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே..

கிழக்கிலிருந்து சூரியன் வெளியே வருகிறது...உங்கள் நினைவோடு நாள் தொடங்கியது... நான் உங்கள் இதயத்துடன் சொல்லவிரும்புகிறேன்..

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது ஒரு வகை வெற்றி.. விழுந்த போதெல்லாம் எழுந்தான் பல மடங்கு சக்தியுடன்... என்பது மிகப்பெரிய வெற்றி...

கனவுகள் மெய்ப்பட கடினமாக உழை... காட்சிகள் கண்ணில் பிம்பங்களாய் தோன்றினாலும்.. நீ நினைத்தால் ஒரு நாள் நிழலும் நிஜமாகும்...

பாதைகள் தொடர்ந்தால் நம் பயணங்கள் முடியாது... விழுந்தவுடன் துணிவுடன் எழுந்தால் இனி வெற்றி மட்டும் தான் வரலாறு...

உலகில் வெற்றிகரமான மனிதனாக வாழ நான்கு நற்குணங்கள் மட்டுமே தேவை... நிறைய பொறுமை, வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்தும் திறமை, தவறைக் கண்டிக்கும் அச்சமின்மை, தவறு செய்தவர்களை அணைத்துச் செல்லும் கனிவுடைமை.

எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லைஆனாலும் எதிர் பார்க்காமல் யாரும் வாழ்வது இல்லை.இனிய காலை வணக்கம்!

இன்று வரும் துன்பங்களை கண்டு ஒழிந்தால்நாளை வரும் துன்பங்களை யார் வரவேற்பது.காலை வணக்கம்!

துன்பம் நேர்ந்த காலத்தை மறந்து விடுஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.இனிய காலை வணக்கம்!

உன்னை நம்புஉன் உழைப்பை நம்புஅதிர்ஷடத்தையே நம்பாதே.

ஒரு குறிக்கோளை முடிவு செய்த பின் அதற்கான முயற்சிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.இனிய காலை வணக்கம்!

உன்னை போல இந்த உலகில் யாரும் இல்லைஅதற்கு உன் கை ரேகைகளே சாட்சி!இனிய காலை வணக்கம்!

முன் வைத்த காலை பின் வைக்காதே வெற்றியோ தோல்வியோ இறுதி வரை முயற்சி செய்.அடுத்தவர்களிடம் குறைகளை தேடுவதை விடநிறைகளை தேடு உன் மனம் பக்குவமடையும்.

இனிய காலை வணக்கம்!

தண்ணீரை கூட சல்லடையில் அள்ளலாம் பனிக்கட்டியாக ஆகும் வரை காத்திருந்தால்.இனிய காலை வணக்கம்!

ஆவலாய் காத்திருக்கிறோம்மழைக்காக குடையும்உனக்காக நானும்காலை வணக்கம்!

இந்த உலகில் நீ மாற்றத்தை விரும்பினால்முதலில் உன்னிடம் இருந்து தொடங்கு.

நம் வாழ்வில் திரும்ப பெற முடியாதவைஉயிரும் ,நேரமும் ,சொற்களும்.இனிய காலை வணக்கம்!

வேதனைகளை வென்று விட்டால் அதுவே ஒரு சாதனை தான்.

இனிய காலை வணக்கம்!

எல்லா சமயமும் கூறுவது தீமையை செய்யாதே நன்மையை செய்.

இனிய காலை வணக்கம்!

உதிக்கும் சூரியனை போலஉங்கள் வாழ்க்கை நன்கு மிளிரட்டும்.

இனிய காலை வணக்கம்!

தோல்வி உன்னை துரத்தினால்வெற்றியை நோக்கி நீ ஓடு

இனிய காலை வணக்கம்!

தலையணையின் அணைப்பிலிருந்துகனவுகளின் பிணைப்பிலிருந்துநித்திரையின் அணைப்பிலிருந்துஇமைகளை அவிழ்த்துநேற்றை மறந்து இன்றை தொடர் இனிய காலை வணக்கம்!

கதிரவனின் கடை கண் பார்வையில்மறைந்திருக்கிறது உனக்கென ஒரு நாள்

புன்னகையுடன் தொடங்குபூக்களாக நிறையட்டும்இந்த தினம்.

புன்னகையும் மௌனமும்மிக பெரிய ஆயுதங்கள்புன்னகை பல பிரச்னைகளை தீர்க்கும்

மௌனம் பல பிரச்சனைகளை வர விடமால் தடுக்கும்.காலை வணக்கம்!

வாழ்க்கைஒரு ரோஜா செடி மாதிரிமுள்ளும் இருக்கும்மலரும் இருக்கும்முல்லை கண்டு பயந்து விடாதேமலரை கண்டு மயங்கி விடாதே.இனிய காலை வணக்கம்!

விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீமுடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திருசாதிக்கலாம்! இனிய காலை வணக்கம்!

தவறி விழுந்த விதையே முளைக்கும் போதுதடுமாறி விழுந்த உன் வாழ்க்கை மட்டும் சிறக்காதா.காலைவணக்கம்!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 March 2024 11:50 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்