/* */

திருப்பதியில் குறைந்தது பக்தர்கள் கூட்டம் சில மணிநேரங்களில் இலவச தரிசனம்

திருப்பதி என்றாலே வெங்கடாசலபதியை தரிசிக்க கூட்டம் என்றுதான் நினைவிற்கு வரும். ஆடிமாதம் பிறந்துவிட்டதால் தற்போது திருமலையில் குறைந்த பக்தர்கள்கூட்டமே காணப்படுகிறது.இலவச தரிசனத்திலேயே எளிதாக தரிசிக்கின்றனர்.

HIGHLIGHTS

திருப்பதியில் குறைந்தது பக்தர்கள் கூட்டம்   சில மணிநேரங்களில் இலவச தரிசனம்
X




devotees easy dharshan to tirumalaதிருப்பதி என்றாலே கூட்டம்தான் நினைவிற்கு வரும். அந்த வகையில் வருடம் 365 நாட்களும் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்தாலும் தமிழக பக்தர்களின் எண்ணிக்கைதான் ஆண்டு முழுவதும் அதிகம் இருக்கும். அதுவும் விடுமுறை நாட்களில் சொல்லவே தேவையில்லை. கோடைவிடுமுறையில் எங்கும் இடமிருக்காது. கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக எங்கும்செல்ல இயலாத நிலை இருந்தது. தற்போது பரவல்கட்டுக்குள் வந்துவிட்டதால் திருமலையில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோத துவங்கியது.

devotees easy dharshan to tirumalaஒரு நாள் முழுக்க கால் கடுக்க நின்று தரிசனம் செய்யும் நிலை தொடர்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருமலை திருப்பதியில் பக்தர்களின் கூட்டமானது வெகுவாக குறைந்துள்ளது. காரணம் ஆடிமாதம் பிறந்து விட்டதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அம்மன் கோயில்களில் திருவிழா நடக்கும். திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நட்டுவிட்டாலே யாரும் வெளியூர்களுக்கு பயணம் செய்ய மாட்டார்கள் என்பது ஐதீகம்.

அதுவும் இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, கருட பஞ்சமி, ஆடி பதினெட்டாம் பெருக்கு, வரலட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தி என வரிசையாக பண்டிகை விசேஷங்கள் வரிந்து கட்டி நின்றதால் பகத்ர்கள் கூட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. அதுவும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறையும் இல்லை என்பதும் ஒரு காரணம்.

இலவச தரிசனத்திற்காக நாள் முழுக்க காத்திருந்த பக்தர்கள் தற்போது மிகவும் எளிதாக அதிக நேரம் நிற்காமல் 2 மணி மற்றும் 3 மணி நேரத்திற்குள் வெங்கடாசலபதியை தரிசித்து செல்கின்றனர். அதேபோல் கட்டண தரிசனமான விரைவு தரிசனத்திலும் இதைவிட எளிதாக சென்று தரிசிக்கின்றனர். நேற்றுமுன்தினம் மட்டும் ஏழுமலையானை 69 ஆயிரத்து 628 பக்தர்கள் தரிசித்துள்ளனர். உண்டியல் வசூல் ரூ. 4 கோடியே 11 லட்சம் எனதேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 Aug 2022 3:12 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  2. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  3. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  6. திருவண்ணாமலை
    தூய்மை பணியாளர்களுக்கு உணவளித்து அவர்களுடன் உணவு சாப்பிட்ட கலெக்டர்
  7. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  8. ஈரோடு
    பெருந்துறை அருகே முதியவர் எரித்துக் கொலை: சிறுவன் உள்பட 3 பேர் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்