சசி தரூர் வழியில் அசோக் கெலாட்டும் காங். தலைவர் பதவிக்கு போட்டியிட தயார்

சசி தரூர் வழியில் அசோக் கெலாட்டும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட தயார் என அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சசி தரூர் வழியில் அசோக் கெலாட்டும் காங். தலைவர் பதவிக்கு போட்டியிட தயார்
X
அசோக் கெலாட், சசி தரூர்

நமது பாரத நாட்டில் கடந்த 2009ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பெற்ற வெற்றியின் மூலம் மீண்டும் மோடியே இரண்டாம் முறையாக பிரதமர் பதவியை அலங்கரித்து வருகிறார். பா.ஜ.க.வின் இந்த தொடர் வெற்றியின் மூலம் காங்கிரஸ் 7 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாகவே இருந்து வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மற்றும் ரேபரேலி நாடாளுமன்ற தொகுதிகள் நேரு காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தன. நாடு முழுவதும் மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி தழுவிய கால கட்டங்களில் கூட காந்தி குடும்பத்தின் சார்பில் போட்டியிட்ட இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி போன்றவர்கள் அத்தொகுதிகளில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் சென்று இருக்கிறார்கள். ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் ஸ்மிதி ராணியிடம் தோல்வியை தழுவினார்.


தங்களது குடும்ப பாரம்பரிய தொகுதியில் ஏற்பட்ட தோல்வியை தாங்கி கொள்ள முடியாத ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். இதனிடையே, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24 முதல் 30-ம் தேதி வரை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனிடையே, தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் யார்? என்பதில் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல்காந்தியே பொறுப்பேற்க வேண்டுமென தமிழ்நாடு பல்வேறு மாநில காங்கிரஸ் தலைமை தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. இதனால், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, காங்கிரஸ் மூத்த தலைவர்களும் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஜி23 என்று அழைக்கப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சசி தரூர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மற்றொரு மூத்த தலைவர் திட்டமிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கிய இந்திய ஒற்றுமை பாத யாத்திரை கேரளாவை அடைந்துள்ளது. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் ராகுல்காந்தி பாத யாத்திரையாக பணித்து வருகிறார். இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என ராகுல்காந்தி கடைசியாக ஒருமுறை வலியுறுத்த அசோக் கெலாட் டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விமானம் மூலம் புறப்படுகிறார். முன்னதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அசோக் கெலாட் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர் தேர்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


இந்நிலையில், அசோக் கெலாட் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவீர்களா?என்பது உள்பட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கெலாட், காங்கிரஸ் கட்சியும், கட்சி மேலிடமும் எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளது. நான் 40 முதல் 50 ஆண்டுகளாக பதவியில் உள்ளேன். என்னை பொறுத்தவரை எனக்கு பதவி முக்கியமல்ல. எனக்கு கொடுக்கப்படும் பொறுப்புகளை நான் செய்து முடிப்பேன். காங்கிரஸ் கட்சியின் ஆண், பெண் தொண்டர்கள் என் மீது அளவற்ற அன்பையும், நம்பிக்கையையும் கொண்டுள்ளனர். ஆகையால், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தொண்டர்கள் கேட்டுக்கொண்டால் நான் அதை நிராகரிக்க முடியாது. கட்சி தொண்டர்கள் விரும்பினால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய தயார் என்றார்.

மேலும் எனது நண்பர்களுடன் இது குறித்து பேசவேண்டும். எனக்கு ராஜஸ்தான் முதல்-மந்திரி என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரியாக எனது பொறுப்பை செய்து வருகிறேன் தொடர்ந்து செய்வேன். காங்கிரஸ் எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளது. பதவி எனக்கு முக்கியமல்ல. முடிவெடுப்பது என்கையில் இருந்தால் நான் எந்த பதவியையும் ஏற்க விரும்பவில்லை. நான் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரையில் சேர விரும்புகிறேன். நாட்டு நிலைமையை பார்த்தால் அரசியலமைப்பு அழிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. பா.ஜ.க நாட்டை அழிக்கிறது என்றும் அசோக் கெலாட் தனது டெல்லி பேட்டியில் கூறி உள்ளார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக ராஜஸ்தானில் நடந்த அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என முதன் முதலாக தீர்மானம் நிறைவேற்றியது இதே அசோக் கெலாட் தான். இப்போது அவரே தலைவர் பதவியில் போட்டியிடவும் தயாராக இருக்கிறேன் என கூறி இருப்பது காங்கிரஸ் கோட்டையில் மேலும் ஒரு ஓட்டை விழுந்தததாக தான் கருதப்படுகிறது.

Updated On: 21 Sep 2022 12:23 PM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...