/* */

இந்திய தடுப்பூசி சான்றிதழுக்கு மேலும் 5 நாடுகள் அனுமதி

இந்திய அரசின் கோவிட்19 தடுப்பூசி சான்றிதழுக்கு, மொரிஷியஸ் உள்பட, மேலும் 5 நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன.

HIGHLIGHTS

இந்திய தடுப்பூசி சான்றிதழுக்கு மேலும் 5 நாடுகள் அனுமதி
X

கொரோனாவுக்கு எதிரான போரில், தடுப்பூசி முக்கிய ஆயுதமாக உள்ளது. இந்தியாவில், கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, சான்றிதழை சில உலக நாடுகள் ஏற்காமல் இருந்து வந்தன.

இந்நிலையில், இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை மேலும் 5 நாடுகள் அங்கீகரித்துள்ளதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், டிவிட்டரில் தெரிவித்துள்ளது. எஸ்டோனியா, கிரிக்ஸ்தான், பாலஸ்தீனம், மொரிஷியஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் இந்திய அரசு வழங்கும் தடுப்பூசி சான்றிதழை அங்கீகரித்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி, ஜி20 உச்சி மாநாடு மற்றும் பருவநிலை மாநாட்டில் பங்கேற்க இத்தாலி, ஸ்காட்லாந்து ஆகிய இடங்களுக்கு சென்றார். இந்த பயணத்தின் போது, இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழ் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் சில நாடுகள், இதை அங்கீகரித்துள்ளன.

அதேபோல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு, ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம் தந்துள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் டிவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 1 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  3. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  4. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  7. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!