மத்திய அரசு வேலை:மொத்த காலியிடங்கள் -46 யு.பி.எஸ்.சி அறிவிப்பு
பல்வேறு அமைச்சகங்களில் உள்ள காலியிடங்களுக்கு UNION PUBLIC SERVICE COMMISSION மூலம் பணி அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
HIGHLIGHTS

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள காலியிடங்களுக்கு UNION PUBLIC SERVICE COMMISSION மூலம் பணி அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இது குறித்த விபரங்கள் :
காலியிட விபரங்கள் : அசிஸ்டென்ட் டைரக்டர் 4, ரிசர்ச் ஆபிசர் 8, இந்தியன் இன்பர்மேஷன் சர்வீசில் சீனியர் கிரேடு 34, மொத்தம் 46 இடங்கள்.
வயது வரம்பு : அசிஸ்டென்ட் டைரக்டர் பதவிக்கு 35 வயதிற்குள்ளும், மற்ற பதவிகளுக்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: பணி அனுபவம் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. /- பெண்கள் / எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 12.8.2021
ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும், விண்ணப்பிக்கும் விபரங்கள் மற்றும் கல்வித்தகுதி உட்பட கூடுதல் விபரங்களுக்கு, கீழேகொடுக்கப்பட்டுள்ள அதிகாரப் பூர்வ இணைய தளத்தின் அறிவிப்பு லிங்கை கிளிக் செய்யுங்கள்.
அதிகாரப் பூர்வ இணைய தள அறிவிப்பு லிங்: https://www.upsc.gov.in