ஆரோக்கியமான இதயம் வேண்டுமா? இதை பாலோ - அப் பண்ணுங்க...!

காதலை, அன்பை இதயத்தை ஒப்பிட்டு சொல்கிேறாம். ஏனெனில், இதயம்தான் உயிர் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. ஆனால், அந்த இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தால் தான், நீண்டகாலம், நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும். அதற்கான வழிமுறைகளை காண்போம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆரோக்கியமான இதயம் வேண்டுமா? இதை பாலோ - அப் பண்ணுங்க...!
X

இதயம் ஆரோக்கியம் - இதை பின்பற்றினால் உங்கள் இதயம் பலசாலி ஆகும்.

ஆரோக்கியமான பழக்க வழக்கம் மூலம், நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள முடியும். அப்படி இதய ஆரோக்கியத்துக்காக நாம் பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.


இதய நோயை அதிகரிக்க செய்யும் ஆபத்தான காரணிகள் பல உண்டு. மருத்துவ ரீதியில் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் உண்டு என்றாலும் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க, நாம் கட்டுப்படுத்த வேண்டிய விஷயங்கள் பலவும் உள்ளன. அதை பின்பற்றுவதன் மூலம், இதய நோய் அபாயத்தை பெருமளவில் குறைக்க முடியும்.


ஆரோக்கியத்துக்கு பழங்கள் காய்கறிகள்

நார்ச்சத்தும், ஊட்டச்சத்துக்களும் இதயத்தை ஆரோக்கியமாக்குகிறது. இவை குறைந்த கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைந்தவை. அதோடு இவற்றில் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இது நீரிழிவு மற்றும் இதய நோய்க்கு வழிவகுக்கும் சேதத்திலிருந்து மனித உடலில் உள்ள செல்களை பாதுகாக்க உதவும்.


மாரடைப்பை தடுக்க நடைபயிற்சி

வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை 40 நிமிடங்கள் ஜாகிங் அல்லது 25 நிமிட கடுமையான உடயிபயிற்சி போன்றவற்றை செய்வது இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் உடல் எடையை குறைக்க செய்யும். தினமும் 10 நிமிடங்கள் என்று செய்தால் கூட போதுமானது.

இதய ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி

இதயம் ஆரோக்கியமாக இருக்க இதய நோய்களை தவிர்க்க தினசரி உடற்பயிற்சி மட்டும் போதுமானது அல்ல. நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பதும் அவசியம். வழக்கமாக உடற்பயிற்சி செய்தாலும், நாள் முழுவதும் ஓய்வில் இருப்பது நன்மை தராது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது, தோட்டம் அமைப்பது,. குழந்தைகளுடன் விளையாடுவது, நடந்து செல்வது, வீட்டை சுத்தம் செய்வது என்று இயங்கி கொண்டே இருப்பதுதான் பலனளிக்கும்.

மாரடைப்பை தடுக்க நட்ஸ் சாப்பிடுங்க...

கொட்டைகளில் இருக்கும் நார்ச்சத்து, நிறைவுறாத கொழுப்புகள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் வீக்கம், கெட்ட எல்டிஎல் கொழுப்பு மற்றும் இரத்த நாளங்களில் பிளேக் கட்டமைத்தல் ஆகியவற்றை குறைக்க செய்யும். இவை எல்லாமே இதய நோயுடனும் பக்கவாதத்துடனும் தொடர்புடையது. கொட்டைகள் அளவாக இருப்பது மிக முக்கியம். இதில் நிறைய கலோரிகள் உள்ளன. வாரத்தில் 4 சிறிய கையளவு உப்பில்லாத கொட்டைகள் சேர்ப்பது பயனளிக்கும்.


ஆழ்ந்த தூக்கம் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

நாள் முழுவதும் உழைக்கும் உடலுக்கு ஆழ்ந்த அமைதியான ஓய்வு தேவை. அப்போது இதயதுடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் குறைகிறது. இது போன்று உடல் உள்ளுறுப்புகள் பலவும் ஓய்வெடுக்க தொடங்குகிறது. எப்போதும் 7 மணி நேர தூக்கம் என்பது அவசியம். அவை குறையும் போது உடலில் பல ரசாயனங்களை உருவாக்க தொடங்கலாம். தூக்கம் குறைவது இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும்.


யோகா செய்வதால் இதயம் வலிமை பெறும்

யோகா என்பது உடற்பயிற்சி என்பதை தாண்டி மனதை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்தை குறைக்கவும் சிறந்த வழியாகும். இது இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைத்து நிம்மதியாக உணர வைக்கலாம். யோகா ஓய்வெடுக்கவும் மன அமைதியை அளிக்கவும் உதவும் சிறந்த மருந்து.


தனிமையால், உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு

தனிமையில் இருக்கும் போது புகைப்பழக்கம் (இருந்தால்) அதிகரிக்கும், உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம், உடல் பருமன் அல்லது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவை எல்லாமே மோசமானது. இதை குறைக்க, பிடித்த நண்பர்களுடன் நேரம் செலவிட வேண்டும். மற்றவர்களுடன் இணைந்திருப்பது, ஆற்றலை, மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும். அதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை நண்பர்களுடன் சந்திப்பதை திட்டமிடுவது மிக முக்கியம்.

உடலுறவு, ஹார்ட் அட்டாக் தடுக்கும்

வாரத்துக்கு இரண்டு முறை உடலுறவு கொண்டால், இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதற்கான சரியான காரணம் தெரியவில்லை என்றாலும் உடலுறவு கொள்வது இதயத்தை பாதுகாக்க உதவும். ஆரோக்கியமானவர்கள் அதிகமாக உடலுறவு கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக எடை இதய நோயை உருவாக்கும்

உடல் பருமன் அதிகரித்தால் உண்டாகும் பிரச்னைகளில் இதுவும் ஒன்று. அதிக எடை காரணமாக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான முரண்பாடுகளை அதிகரிக்கின்றன.எனவே, உடல் எடையை குறைப்பது மிக முக்கியம். புகை, மது பழக்கம் இருந்தால், உடனடியாக அதை கைவிட வேண்டும். டாக்டர் ஆலோசனைகளை பின்பற்றி நடக்க வேண்டும்,

Updated On: 24 Jan 2023 12:49 PM GMT

Related News