/* */

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றால அருவிகளில் வெள்ளம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், கடையம், கடையநல்லூர், சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, ஆறு போல் தண்ணீர் விழுவதால், அருவியை காண்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.

ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது கொரோனா பரவல் தடை காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால், மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 15 Nov 2021 9:49 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!