/* */

விருதுநகரில் முறையின்றி பத்திரப்பதிவு: பொதுமக்கள் தர்ணா

விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையாக பத்திர பதிவு செய்யவில்லை என பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விருதுநகரில் முறையின்றி பத்திரப்பதிவு: பொதுமக்கள் தர்ணா
X

விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையாக பத்திர பதிவு செய்யவில்லை என பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையாக பத்திர பதிவு செய்யவில்லை என பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மதுரை சாலையில் அமைந்துள்ள மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையாக பத்திர பதிவு செய்யவில்லை எனக் கூறி இருபதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5000 சதுர அடிக்கு மேல் இருக்கும் இடங்களை பத்திரப்பதிவு செய்யப்படாது என நேற்று அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் இன்று விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவை நிறுத்தியுள்ளனர். இதே போல் 5000 சதுர அடிக்கு மேல் உள்ள இடங்களை பதிவு செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் ஆகும்.

அதற்கான கூடுதல் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியும் பத்திரப்பதிவை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பத்திரப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Updated On: 23 Dec 2021 10:41 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு