/* */

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் 4 நாட்கள் அனுமதி

மார்கழி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் 4 நாட்கள் அனுமதி.

HIGHLIGHTS

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் 4 நாட்கள் அனுமதி
X

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் காேவில்.

மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 4 நாட்கள் அனுமதி.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோயிலானது தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பௌர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி முதல் ஜனவரி 03 ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா, ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக மலையேறும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், நீரோடைகளில் இறங்கி குளிப்பதற்கு அனுமதி இல்லை எனவும் பக்தர்கள் மலையேற காலை 7 மணி முதல் 10 மணி வரை 3 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படும், கோவிலில் இரவு தங்குவதற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 29 Dec 2021 11:01 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  6. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  9. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  10. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...