/* */

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஊக்கப்பரிசு

கொரோனா தடுப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஊக்கப்படுத்துவதற்காக சிறப்பு பரிசுகள் வழங்கி வருகின்றனர்

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஊக்கப்பரிசு
X

காரியாபட்டியில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தனியார் டிரஸ்ட்  சார்பில் சிறப்பு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது

காரியாபட்டியில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சிறப்பு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் தமிழக அரசின். 15-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. காரியாபட்டி வட்டாட்சியர் தனக்குமார், மற்றும் கல் குறிச்சி காரியாபட்டி மல்லாங்கினறு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மையங்களில் நடைபெற்ற முகாம்களை, பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

காரியாபட்டி அமலா பள்ளியில் நடைபெற்ற முகாமில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட வர்களுக்கு காரியாபட்டி எஸ்.பி.எம்.டிரஸ்ட் சார்பாக ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது . வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரூபன்ராஜ், டாக்டர் நிரஞ்சனா, வட்டார சுகாதார ஆய்வாளர் கருப்பையா, எஸ்.பி.எம். அறக்கட்டளை நிறுவனர் எம். அழகர்சாமி, கிராம நிர்வாக அலுவலர் காசிமாயன், கிராம உதவியாளர் சுரேஷ் பலர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக எஸ்.பி.எம்.டிரஸ்ட் நிறுவனர் கூறியதாவது:தமிழக அரசின் சார்பாக, இதுவரை காரியாபட்டியில் நடைபெற்ற 15 சிறப்பு கொரோனா தடுப்பு முகாம்களில், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஊக்கப்படுத்துவதற்காக சிறப்பு பரிசுகள் வழங்கி வருகிறோம். கொரோனா தடுப்புக்காக தமிழக அரசு மேற்கொண்டுவரும் அனைத்து நோய் தடுப்பு திட்டங்களை காரியாபட்டி வட்டாரத்தில் முழுமையாக நிறைவேற்ற உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார்.

Updated On: 18 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...