/* */

விருதுநகர் நரிக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு: 353 காளைகள் பங்கேற்பு

2 வருடங்களுக்கு பின்பு விறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் பங்கேற்பு:

HIGHLIGHTS

விருதுநகர் நரிக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு: 353 காளைகள் பங்கேற்பு
X

நரிக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு

நரிக்குடி அருகே 2 வருடங்களுக்கு பின்பு விறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே பள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீஅய்யனார், ஸ்ரீ அரிய சுவாமி கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு,2 ஆண்டுகளுக்கு பின்பு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.போட்டியை, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாண் குமார் தொடங்கி வைத்தார்.

மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 400 காளைகள் முன்பதிவு செய்திருந்த நிலையில் 353 காளைகள் பங்கேற்றன.மேலும், 150 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட நிலையில்,ஒரு மணி நேரத்திற்கு 25 வீரர்கள் என 6 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது.வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளை உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. திருச்சுழி காவல் துணைக் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில், சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On: 29 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  2. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  3. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  4. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  5. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...
  7. காங்கேயம்
    வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு...
  8. திருப்பூர்
    உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு
  9. உடுமலைப்பேட்டை
    உடுமலை அருகே குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
  10. வீடியோ
    🔥Ajith Billa Re-Release🔥 FDFS Celebration | Ajith Kumar | Billa |...