/* */

காரியாபட்டி பேரூராட்சியில் வளர்ச்சித் திட்டங்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடக்கம்

முதல்வரின் உன்னதமான திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் காரியாபட்டி பேரூராட்சி தன்னிறைவு அடைந்து வருகிறது

HIGHLIGHTS

காரியாபட்டி பேரூராட்சியில் வளர்ச்சித் திட்டங்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடக்கம்
X

காரியாபட்டி பேரூராட்சியில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் தங்கம்தென்னரசு.

முதல்வரின் உன்னதமான திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் காரியாபட்டி பேரூராட்சி தன்னிறைவு அடைந்து வருகிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு:

தமிழக முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் காரியாபட்டி பேரூராட்சி தன்னிறைவு பெற்று வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார் . விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில், அம்ருத் - 2.0. திட்டத்தில் 10 கோடியே 27 லட்சம் மதிப்பிட்டில் குடிநீர் விஸ்தரிப்பு பணிகள், கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தில் தூய்மை பணிக்கு 24 லட்சத்து 40 ஆயிரம் மின்கல வாகனங்கள் வழங்குதல், கோல்டன் நகரில் 25 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைத்தல் செவல்பட்டி மந்தை ஊரணி 28 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் துவக்க விழா நடை பெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். இராமநாதபுரம் எம்.பி.நவாஸ் கணி முன்னிலை வகித்தார். .செயல் அலுவலர் அன்பழகன் வரவேற்றார் . நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரச ,திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியது:விருதுநகர் மாவட்டத்தில் ,மிகவும் பின் தங்கி காணப்பட்ட காரியாபட்டி பேரூராட்சி இன்று வேகமாக வளர்ந்துவரும் நகரங்களில ஒன்றாக உள்ளது.நகரின் விஸ்தரிப்புக்கு ஏற்ப மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதலும் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதில் உள்ளாட்சி அமைப்புகளும், சட்டமன்ற உறுப்பினரான நானும், மாவட்ட ஆட்சித் தலைவரும் மிகுந்த ஆர்வம் கொண்டு செயலாற்றி வருகின்றோம்.

வளர்ந்து வரக்கூடிய காரியாபட்டி நகரத்திற்கு மிகவும் அடிப்படை தேவையான குடிநீரை தங்குதடையின்றி வழங்குவதற்கு ஏதுவாக குடிநீர் குழாய்கள், உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து சுமார் 3750 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க இன்று பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பேரூராட்சியில் அனைத்து வார்டுகளும் சுற்றுபுறச் சூழலை தூய்மையாக வைத்திருக்கவும் சுகாதார பணிகளை மேம்படுத்தும் நோக்கில் குப்பைகளை சேகரிப்பதற்கு புதிய மின்கல வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் ,கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்க தவறிய தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்க ஏதுவாக, ஜனவரி மாதம் மேல்முறையீடு விண்ணப்பம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நூறு நாள் வேலை திட்டம் பேரூராட்சி பகுதியிலும் நடைமுறைபடுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வில்லை .

இது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவரும் ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்" 100 நாள் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு வந்த பிறகு வேலைகள் தொடங்க ப்படும். தமிழக முதல்வர் அறிவித்த கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தின் மூலம் பஸ் நிலையம் விரிவாக்கம், மின் மயானம், மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தில் ஊரணி பராமரிப்பு, பூங்கா அமைத்தல், தூய்மை திட்டத்திற்கு மின்கல வாகனங்கள் வழங்கும் திட்டம் இன்று துவங்கப்பட்டுள்ளது..

பேரூராட்சியில் தமிழக முதல்வர் கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் சிறப்பாக நிறைவேற்றி பேரூராட்சி தன்னிறைவு பெறுவதற்கு நாம் அனைவரும் பாடுபடு வோம், என்று பேசினார்: அதன் பிறகு காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 2 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை வரிவாக்க மைய கட்டிடத்துக்கு அமைச்சர் தங்கம் தென்ன ரசு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில்,

காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் செந்தில், ஒன்றியக்குழு தலைவர் முத்துமாரி, துணைத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் கண்ணன், செல்லம், மாவட்டக் கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் , பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, பேரூராட்சி துணைத் தலைவர் ரூபி, கவுன்சிலர்கள் லியாகத் அலி, செல்வராஜ், முனிஸ்வரி, முகமது முஸ்தபா சங்கரேஸ்வரன், தீபா, சரஸ்வதி, நாகசெல்வி, ஒன்றிய கவுன்சிலர்கள் சேகர், சிதம்பர பாரதி.

மாவட்டப்பொருளாளர் வேலுச்சாமி,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் தங்கப் பாண்டியன், துணை அமைப்பாளர் கல்யாணி, சங்கர பாண்டியன், மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் வாலை.முத்துசாமி, மாவட்ட சுற்றுச் சூழல் அணி துணை அமைப்பாளர்கள் மருது பாண்டியன், சரவணன், திருச்சுழி தொகுதி தகவல் தொழில் நுட்ப பிரிவு அமைப்பாளர் . மனோஜ் பிரபாகரன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திருநாவுக்கரசு, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கருப்பு ராஜா, நகர வர்த்தக அணி அமைப்பாளர் ரமேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

.

Updated On: 16 Dec 2023 1:30 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  3. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  4. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  5. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  6. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  7. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...
  9. காங்கேயம்
    வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு...
  10. திருப்பூர்
    உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு