/* */

கூடுதல் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க சுகாதாரத்துறை மற்றும் வருவாய்துறையினர் தனியார் கல்லூரி விடுதிகளில் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை

HIGHLIGHTS

கூடுதல் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க சுகாதாரத்துறை மற்றும் வருவாய்துறையினர் தனியார் கல்லூரி விடுதிகளில் ஆய்வு
X

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வரும் நிலையில் கூடுதல் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க சுகாதாரத்துறை மற்றும் வருவாய்துறையினர் தனியார் கல்லூரி விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்

அருப்புக்கோட்டையில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள 140 படுக்கைகளில் தற்போது 99 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர் தொடர்ந்து நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கூடுதல் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தனியார் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் சொக்கலிங்கபுரத்தில் உள்ள சௌடாம்பிகா பாலிடெக்னிக் மாணவர் விடுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்காக மாவட்ட சுகாதாரப் பிரிவு தொற்றா நோய் பிரிவு மருத்துவர்கள் விஜய் ,யோகேஷ்,சுகாதார துறை இணை இயக்குநர் உதவியாளர் செல்வராஜ் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் வட்டாச்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர் சாகுல்ஹமீது தலைமையிலான நகராட்சி சுகாதாரதுறையினர் விடுதியில் உள்ள அறைகள் எத்தனை படுக்கை வசதிகள் அமைக்கலாம் கழிப்பிட வசதிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்

இந்த ஆய்வின் போது முன்னாள் நகராட்சி சேர்மன் சிவப்பிரகாசம் கல்லூரி நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்

Updated On: 12 May 2021 3:56 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?