/* */

விழுப்புரத்தில் இறப்பே இல்லாத சித்த மருத்துவம்

விழுப்புரம் மாவட்ட சித்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் இதுவரை இறப்பு இல்லாமல் அனைவரும் குணமடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கொரானா கட்டுக்கடங்காமல் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட சித்த மருத்துவத்தில் இதுவரை இறப்பு இல்லாமல் குணமடைந்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி விடுதியில் செயல்படும் சிறப்பு சித்தமருத்துவ மனையில் இதுவரை 493 பேர் கொரானா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 399 பேர் குணமடைந்து உள்ளனர், தற்போது 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒருவர் கூட உயிர் இழக்காத சிறப்பு சித்த மருத்துவமனையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆங்கில மருத்துவத்தையே அனைவரும் நாடி வருகின்றனர். அனைவருக்குமான ஆக்சிஜன் அளவு குறைவு இருப்பதனால் ஆக்சிசன் பற்றாக்குறையும் இருந்து வருகிற இந்த நேரத்தில், இங்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்கள். அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறைந்தபட்சம் மூன்று நாட்களில் குணப்படுத்தப் பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு அனுப்புவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அனுமதிக்கப்படும் அனைவருக்கும் வேப்ப இலை மாத்திரையும், தாளிசாதி சூரணம் மற்றும் மாத்திரைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் ஆக்சிஜன் அளவு குறைவாக வருகின்ற நோயாளிகளுக்கு கிராம்பு குடிநீர், ஆடாதொடை கசாயம் போன்றவை வழங்கப்பட்டு 10 நிமிடத்திலிருந்து 30 நிமிடத்திற்குள் அவர்களுக்கான ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்துகின்றனர். தினமும் கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் மற்றும் ஐந்து மூலிகை கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி மூலிகை குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றது. இவை அனைத்தும் அந்த சிறப்பு மருத்துவமனையில் தயார் செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அங்கு திருமூலர் பிராண பயிற்சி மற்றும் சுவாச பயிற்சிக்கான யோகாசனங்களும் அவர்களுக்கு கற்பிக்கப் படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் சிகிச்சை முடித்து வீடு திரும்புகிறார்களுக்கு ஆரோக்கியா மருத்துவ மருந்துகள் அடங்கிய மாத்திரைகள் வழங்கப்பட்டு அவர்களை வீடுகளுக்குள் தனிமைப் படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு அனுப்பப்படுகிறார்கள்.

இந்த மருத்துவ மனையில் மருத்துவர் பிரபு, மருத்துவர் சுபாஷினி, மருத்துவர் பொன்மொழி ஆகியோர் சுழற்சி முறையில் பணியாற்றுவதாகவும் ஒவ்வொரு மருத்துவருக்கும் இரண்டு உதவியாளர்கள் ஒரு செவிலியர் உடன் இருப்பதாகவும் தெரிவித்தனர். மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே சித்த மருத்துவத்தை நாடி வருவது இல்லை என்றும் வேதனைப்படுகின்றனர்

Updated On: 28 May 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!