/* */

கொரானா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரத்தில் நடைபெற்ற கொரானா ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுரை

HIGHLIGHTS

கொரானா தடுப்பு  ஆலோசனைக் கூட்டம்
X

கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பாக மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சுகாதாரத் துறை இணை இயக்குநா், துணை இயக்குநா், வட்டார மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை ஆலோசனை வழங்கிப் பேசுகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தொற்று பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவா்களை கூடுதல் கவனம் செலுத்தி, அவா்களுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்க வேண்டும், கொரோனா நோய் பாதிப்படைந்தவரின் வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள மற்ற வீடுகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்க வேண்டும். வட்டார மருத்துவ அலுவலா்கள் தங்கள் பகுதிகளுக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தி பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட சித்தா அலுவலா் கபசுர குடிநீா், நோய் எதிர்க்கும் சித்த மாத்திரைகள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.

திண்டிவனம், விழுப்புரம் நகராட்சி நிர்வாகங்கள் சார்பாக அனைத்துப் பகுதிகளிலும் தினமும் மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும். நெடுஞ்சாலைகளில் செயல்படும் உணவகங்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து சுகாதாரமான முறையில் செயல்படுகின்றனவா என்பதை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் ஆய்வு நடத்தி, உறுதி செய்ய வேண்டும்.சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளா்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளை சோ்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்களில் 45 வயதுக்கு மேற்பட்ட, தகுதியான அனைவரையும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.வணிக வளாகங்கள், உணவங்கள், கல்லூரிகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் வேலை செய்யும் இடங்களில் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும். அரசின் கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றார் ஆட்சியா்.

கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் காஞ்சிணா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சண்முகக்கனி, துணை இயக்குநா் செந்தில்குமார், துணை ஆட்சியா் (பயிற்சி) ரூபினா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனா்.

Updated On: 10 April 2021 6:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!