/* */

வந்தவாசி பெருமாள் கோயில் ஸ்ரீ வைணவ மாநாடு

வந்தவாசியில் ஸ்ரீரங்கநாதர் பெருமாள் கோவிலில் 35 -ஆம் ஆண்டு வைணவ மாநாடு நடைபெற்றது

HIGHLIGHTS

வந்தவாசி பெருமாள் கோயில் ஸ்ரீ வைணவ மாநாடு
X

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலில்பல்வேறு கைகரியங்கள் செய்த டாக்டருக்கு ஸ்ரீதர் அவர்களுக்கு "கைங்கரிய செல்வர்"  என்ற விருது  வழங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலில் ஸ்ரீமத் நாதமுனி சுவாமிகள் வைணவ சபையில் 35 ஆம் ஆண்டு வைணவ மாநாடு நடைபெற்றது.

திண்டிவனம் வெங்கடேச சுவாமிகள் தலைமை வகித்தார். மணிவண்ணன்ராமானுஜதாசர் முன்னிலை வகித்தார். செயலாளர் சீனிவாசன் வரவேற்புரையாற்றினார் . டாக்டர் குமார், தலைமை ஆசிரியர் சுகுமாரன் ஆகியோர் கருட கொடியை ஏற்றினர்."பெரியாழ்வார் பெண் பிள்ளை" என்ற தலைப்பில் லட்சுமி நாராயண சுவாமிகள் சொற்பொழிவாற்றினார்.டாக்டர் உ. வே. வெங்கடேஷ் " நம்பியும் நங்கையும்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் பல்வேறு கைங்கரியங்களை செய்து வரும் டாக்டர். பி. ஸ்ரீதருக்கு "கைங்கரிய செல்வர்" என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பாகவதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.

முன்னதாக பஜனை கோஷ்டியினர் கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பெருமாள் கோவிலுக்கு பெருமாள் பாசுரங்களை பாடி ஊர்வலமாக வந்தனர்.நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இறுதியில் முத்துராமானுஜ தாசர் நன்றி கூறினார்.

Updated On: 10 Aug 2022 7:24 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?