/* */

பிருதூர் கிராமத்தில் விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்

வேளாண் பண்ணைக் கருவிகள் வாங்கியதில் முறைகேட்டை கண்டித்து பண்ணை கருவிகளுக்கு பூஜை செய்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

பிருதூர் கிராமத்தில் விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்
X

கடப்பாரை, மண்வெட்டி, கத்தி உள்ளிட்டவைகளுக்கு மஞ்சள், குங்குமம், பூ வைத்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை செய்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சி.கீதாலட்சுமி தலைமை வகித்தார்.

வந்தவாசி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுபாஷ்சந்தர், வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.பாண்டி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பேசிய சில விவசாயிகள், சிறு,குறு விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தமிழக அரசு வேளாண் பண்ணைக் கருவிகளை கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்தனர்.

உள்ளூர் கடைகளிலேயே அந்த கருவிகள் குறைந்த விலையில் கிடைக்கும்போது எதற்காக அதிக விலை கொடுத்து மொத்தமாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.

முன்னதாக, வேளாண் பண்ணைக் கருவிகள் முறைகேட்டை கண்டித்து தனியார் மண்டபம் முன், உழவர் பேரவையின் மாநில தலைவர் வாழ்குடை புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது கடப்பாரை, மண்வெட்டி, கத்தி உள்ளிட்டவைகளுக்கு மஞ்சள், குங்குமம், பூ வைத்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி, சேத்துப்பட்டில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் நடந்தது.

வேளாண் உதவி இயக்குனர் திருமலைச்சாமி முன்னிலை வகித்தார். ஆரணி தாசில்தார் பெருமாள் வரவேற்றார். ‌கூட்டத்தில் பேசிய விவசாயிகள் ஆரணி புது மசூதி தெருவில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர்களுக்கு கடன் உதவிகள், உரிய ஆவணங்கள் கொடுத்தாலும் வழங்கப்படுவதில்லை, பனையூர்- அப்பந்தாங்கல் பகுதிகளில் அதிக அளவில் நெல் விளைச்சல் அதிகரித்து இருப்பதால் அந்த பகுதியில் அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

குன்னத்தூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 2 குளங்கள் உள்ளன, முறையாக தண்ணீர் அங்கு செல்லக்கூடிய சூழ்நிலை இல்லை, அதனை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் சமுதாய கூடத்தில் நடந்தது. மாவட்ட ஊரக உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) சுரேஷ்பாபு தலைமை தாங்கினார்.

சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திர பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேத்துப்பட்டு வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளில் விவசாயிகள் யூரியா உரம் வாங்கும் போது, இடுபொருட்களை வாங்க கட்டாயப்படுத்துகின்றனர், மேலத்தாங்கல் கூட்ரோட்டில் இருந்து மேலத்தங்கல் கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதேபோல பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதுதொடர்பாக விவசாயிகள் கோரிக்கை மனுவும் அளித்தனர்.

கூட்டத்தில் கால்நடை மருத்துவர் ஹரிகுமார், மின்வாரிய உதவி பொறியாளர் பக்தவசலம், பெரணமல்லூர் வட்டார வேளாண்மை துணை அலுவலர் ராஜாராம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 9 March 2022 6:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  3. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  4. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  6. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  7. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  9. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  10. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...