/* */

வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி

கூத்தாண்டவர் கோயில் தேர்திருவிழாவை முன்னிட்டு, திருநங்கைகள் தாலி கட்டுதல் மற்றும் அழகி போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
X

கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற அழகி போட்டி

கூத்தாண்டவர் கோயில் தேர்திருவிழாவை முன்னிட்டு, திருநங்கைகள் தாலி கட்டுதல் மற்றும் அழகி போட்டி நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது. இதில், சென்னையைச் சேர்ந்த பௌர்ணமி என்பவர் முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கூத்தாண்டவர் திருக்கோயில். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் 'கூத்தாண்டவர் திருவிழா' 20 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டு கூத்தாண்டவர் திருவிழா கடந்த மாதம் 5 ஆம் தேதி மகாபாரத சொற்பொழிவுடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது.

கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு பூ கரகம் சோடித்து சாமி மாடவீதி வழியாக ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகாபாரதம் இன்னிசை சொற்பொழிவுகள், பாஞ்சாலி திருமணம், வானவேடிக்கை, கரகாட்டம், கூத்தாண்டவர் பிறப்பு, பெண்கள் தங்கள் வேண்டுதல், பொங்கல் வைத்து மாட வீதி வழியாக ஊர்வலமாக வந்து சாமிக்கு படைத்தல், பெண் அழைப்பு நிகழ்ச்சி திருநங்கைகளுக்கான தாலி கட்டும் நிகழ்ச்சி மற்றும் அழகிப் போட்டிகள் உள்ளிட்டவைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்

இந்த கூத்தாண்டவர் திருவிழாவிற்காக திருவண்ணாமலை, சென்னை, மும்பை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான திருநங்கைகள் வேடந்தவாடியில் குவிந்து வருகின்றனர்.

19 ஆம் நாளான நேற்று திருக்கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து ஊர்வலமாக வந்து சாமிக்கு படைத்தல், பெண் அழைப்பு நிகழ்ச்சி, திருநங்கைகளுக்கான தாலி கட்டும் நிகழ்ச்சி, அதனைத்தொடர்ந்து திருநங்கைகளுக்கான அழகி போட்டிகள் விமர்சையாக நடைபெற்றது.

திருநங்கைகளுக்காக நடைபெற்ற இந்த அழகி போட்டியில் ஏராளமான திருநங்கைகள் விதவிதமாக உடை அணிந்து தங்கள் அழகி நடந்து காண்பித்து மக்களைக் கவர்ந்தனர். இந்த அழகி போட்டியில் முதல் மூன்று இடத்தைப் பிடித்த திருநங்கைகள் சென்னையைச் சேர்ந்த பௌர்ணமி முதல் பரிசையும், சேலத்தைச் சேர்ந்த மிதுளா இரண்டாவது பரிசையும், தஞ்சாவூரைச் சேர்ந்த ஜில்லு மூன்றாவது பரிசையும் பெற்றனர்.

இந்த அழகி போட்டியினை திருவண்ணாமலை, வேடந்தவாடி, மங்கலம், அவலூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அழகி போட்டியை கண்டு மகிழ்ந்தனர்.

Updated On: 25 April 2024 2:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்