/* */

கடைவீதிகளில் திரண்ட பொதுமக்கள், போக்குவரத்து பாதிப்பு

திருவண்ணாமலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கடைவீதிகளில் திரண்ட பொதுமக்கள்,  போக்குவரத்து பாதிப்பு
X

போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் திருவண்ணாமலை தேரடி வீதி

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து இன்று அதிகாலை வரை திருவண்ணாமலையில் பரவலாக மழை பெய்தது.

தற்போது மழை குறைந்து உள்ளதால் புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க கடைவீதிகளில் திரண்டதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. திருவண்ணாமலை நகரில் உள்ள முக்கிய பகுதிகளான சின்னக் கடைவீதி, கடலைக் கடை மூலை சந்திப்பு, திருவூடல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொருட்கள் வாங்க வந்தவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்தனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் ஊர்ந்தபடி மெதுவாக சென்றனர். பெரும்பாலான பகுதிகளில் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யாததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.

இன்று மாலை கடைவீதிகளில் அதிகமாக மக்கள் கூட வாய்ப்பு உள்ளதால் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்து பாதிப்பை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 3 Nov 2021 6:06 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி