/* */

திருவண்ணாமலையில் டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருவண்ணாமலையில் 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
X

பிளாஸ்டிக் கடையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

திருவண்ணாமலை சிவன்படைத் தெருவில் உள்ள தனியாா் கிடங்குகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியனுக்கு புகாா்கள் சென்றன. இதையடுத்து,

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், பெரிய கடைத்தெரு, தேரடி வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திடீரென்று புறப்பட்ட கலெக்டர் , அதிகாரிகளுக்கும் தான் எங்கு செல்கிறோம் என்று சொல்லாமல் சென்றதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலையின் வியாபாரத்தின் மையப் பகுதியான சிவன் பட தெருவில் ஒரு கடையின் முன்பு கலெக்டரின் கார் சென்று நின்றது. அது மொத்த வியாபாரம் செய்யும் பிளாஸ்டிக் அண்ட் எஸ்சென்ஸ் மார்ட் ஆகும்.

அந்தக் கடைக்குள் நுழைந்த கலெக்டர் அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைத்தார்.

கலெக்டர் திடீர் ஆய்வுக்கு சென்ற சம்பவம் அதிகாரிகளுக்கு பரவியதின் பேரில் கோட்டாட்சியர் மந்தாகினி தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் நகராட்சி அலுவலர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் அந்தக் கடையிலும் கடையோடு இணைந்த குடோனிலும் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், கைப்பை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த பொருட்கள் மூட்டையாக கட்டி நகராட்சி லாரி மூலம் ஏற்றிச் செல்லப்பட்டது.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அப்பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு வந்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் இந்த பிளாஸ்டிக் பொருட்களை தயார் செய்யும் தொழிற்சாலையை தடை செய்ய வேண்டும் என கலெக்டரிடம் கேட்டுக் கொண்டனர். அதற்கு கலெக்டர் எங்கு தயாரிக்கிறார்கள் என்று சொல்லுங்கள் தடுக்கிறோம்.

இதையெல்லாம் தடுத்தால்தான் ரோடுக்கு குப்பை வராது. அதை விட்டுவிட்டு ரோடில் குப்பைகளை அள்ளினால் திரும்பத் திரும்ப குப்பை வந்து கொண்டு தான் இருக்கும். இதனால் எத்தனை பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் கொஞ்சம் சிந்தியுங்கள் என கூறினார்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகள், 4 நகராட்சிகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழியை விற்பனை செய்யும் மொத்த விற்பனையாளா்களின் கடைகளில் ஆய்வு செய்து வருகிறோம்.

ஆய்வின்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. குப்பைகளை நெகிழிப் பைகளில் கட்டி வீசுவதால் அந்தக் குப்பைகளை அப்புறப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. குப்பைகள் எரிக்கப்படுவதால் மாசு ஏற்படுகிறது. எனவே, பசுமையான திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்க வேண்டுமானால் ஒருமுறை பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட நெகிழியைப் பயன்படுத்துவதை அனைவரும் தவிா்க்க வேண்டும்.

இப்போது வரை 10 டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, காலாவதியான உணவுப் பொருள்கள் கண்டறியப்பட்டு உணவுத்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் .

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, நகராட்சி ஆணையா் வசந்தி, மாவட்ட சுற்றுசூழல் பொறியாளா் காமராஜ் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

Updated On: 7 March 2024 12:48 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்