/* */

திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

Dead News Today -தென்னை மரம் விழுந்து நகைக்கடை மேலாளர் உயிரிழந்தார். மேலும், இருவர் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
X

தென்னை மரம் விழுந்ததால், பலத்த காயமடைந்த நகைக்கடை மேலாளர் உயிரிழந்தார்.(மாதிரி படம்)

தென்னை மரம் விழுந்து, மேலாளர் பலி

Dead News Today -நல்லவன்பாளையம் கிராமத்தைச் சோந்தவா் முனிசாமி. இவா், திருவண்ணாமலையில் உள்ள நகைக்கடையில் மேலாளராக பணி செய்தாா்.நகைக்கடை உரிமையாளருக்கு சொந்தமான திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள பண்ணை வீட்டில், நேற்று மரங்கள் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் முருகன், ஆறுமுகம் ஆகியோருடன் சேர்ந்து, தென்னை மரத்தை வெட்டும்போது, எதிா்பாராத விதமாக முனிசாமி மீது, தென்னைமரம் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த முனிசாமி, அதே இடத்தில் உயிரிழந்தாா். காயமடைந்த முருகன், ஆறுமுகம் ஆகியோா் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெறுகின்றனா். இதுகுறித்து, திருவண்ணாமலை நகர போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனா்.

குட்கா விற்ற வாலிபர் கைது

மங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் .உள்ள கடைகளில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில், பண்டல்களில் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மொத்த எடை 45 கிலோ. இதையடுத்து போலீசார் கடை உரிமையாளிடம் விசாரணை செய்த போது, சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவர் குட்கா பண்டலை கடையில் வைத்து சென்றதாக தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, போலீசார் சேத்துப்பட்டு பகுதியில் விசாரணை நடத்தியதில் அங்கு பெட்டி கடை நடத்தி வரும் வடமாநிலத்தை சேர்ந்த பக்காரம் என்பவர், குட்கா பொருட்களை கடைகளுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, 45 கிலோ குட்கா பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

துாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வெம்பாக்கம் அப்துல்லாபுரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர், போலீசாரை கண்டதும் வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆரணி தாலுாகா ராட்டிணமங்கலம் கிராமத்தை சேர்ந்த வினோத், பிரபாகரன் என்பதும், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் மீது திருட்டு உள்ளிட்ட 3 வழக்குகள் நிலவையில் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பைக், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணைக்காக அழைத்து சென்றவர், தப்பி ஓட்டம்

திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், தர்மபுரியை சேர்ந்தவர் என்பதும், வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ்காரர் ஒருவர், அவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு போளூர் சாலை வழியாக சென்றார். திருவண்ணாமலை அண்ணா நுழைவுவாயில் அருகில் வரும் போது, அந்த நபர் திடீரென பைக்கில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினார். இதையடுத்து போலீஸ்காரர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தப்பியோடிய நபரை பின்தொடர்ந்து சென்றார். அந்த நபர் வேங்கிக்காலில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் அருகில் பதுங்கிய போது, அவரை அந்த போலீஸ்காரர் மடக்கிப் பிடித்தார். மேலும் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள், அவரை பிடித்து விசாரணைக்காக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

பிடிபட்ட நபர் குறித்து போலீசார் கூறுகையில், சமீபத்தில் 2 இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. அந்த சம்பவங்களில் அவர் தொடர்பில் உள்ளாரா? என்ற சந்தேகத்தின் பேரில், விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Nov 2022 5:12 AM GMT

Related News