/* */

அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு பெற்றதையொட்டி அண்ணாமலையார் தீர்த்தவாரி பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழா கடந்த 16ம் தேதி திருக்கோயிலின் தங்க கொடிமரம் அருகே உள்ள சம்பந்த விநாயகர் கோயில் முன்பு பந்தக்கால் முகூர்த்தம் தொடங்கியது.

அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கடந்த 10 நாட்களாக இரவு எழுந்தருளி திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் மகிழ மரம் அருகே உள்ள நான்கு கால் மண்டபத்தில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்று.

வசந்த உற்சவ விழாவின் பத்தாம் நாளான இன்று அண்ணாமலையார் தீர்த்தவாரி பக்தர்கள் இன்றி நடைபெற்றது. அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள இராஜ கோபுரம் அருகே உள்ள நான்கு கால் மண்டபத்தில் அண்ணாமலையார் திரிசூலம் கொண்டு வரப்பட்டு.

அய்யங்குளத்திலிருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு பெரிய பித்தளை அண்டாவில் ஊற்றி பின்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மூன்று முறை தண்ணீரில் சூலத்தை மூழ்கி எடுத்து பின்னர் பால் தயிர் சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்து தீபாரதனை காட்டினர். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

Updated On: 27 April 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  4. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  5. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  7. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  10. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...