/* */

திருவண்ணாமலை: நெடுஞ்சாலை துறை சார்பில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

சாலை விரிவாக்கம், வாகன நெரிசலை குறைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலை துறை சார்பில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: நெடுஞ்சாலை துறை சார்பில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்
X

 நெடுஞ்சாலை துறை சார்பில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது., கோட்ட பொறியாளர் முரளி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சாலை விரிவாக்கம், வாகன நெரிசலை குறைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணியின் மூலம் எந்தெந்த சாலையில் எவ்வளவு வாகனங்கள் செல்கின்றன என்று வாகனங்களில் எண்ணிக்கையை கணக்கீடு செய்து அதன் அடிப்படையாக கொண்டு சாலை அகலப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நேற்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. அதன்படி திருவண்ணாமலை கோட்டத்தில் இன்று 44 இடங்களில் இப்பணி தொடங்கியது. இதில் 250-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலையில் நடைபெற்ற பணியினை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல் இப்பணியினை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர்கள் கலைமணி, தினேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இப்பணியானது தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற உள்ளது.

Updated On: 11 May 2022 8:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!