/* */

திருவண்ணாமலை: குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த போந்தை ஊராட்சியில் குற்றங்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் கலந்துகொண்டு குற்றங்களை தடுப்பதற்கு உண்டான வழிமுறைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.

கூட்டத்தில் வீட்டின் முன்பக்கம், பின்பக்கம் கதவுகளுக்கு விலை உயர்ந்த பூட்டு பயன்படுத்த வேண்டும். வெளியூர்களுக்கு செல்லும் போது அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பூட்டப்பட்ட வீடுகளில் நகைகள் மற்றும் பணத்தை வைக்காமல் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க வேண்டும். வெளியூர்களுக்கு செல்லும் போது பக்கத்து வீடுகளில் சொல்லிவிட்டு செல்ல வேண்டும். இரவு நேரங்களில் முன்பக்கம், பின்பக்கம் மின்சார விளக்குகளை எரியவிட வேண்டும். வீட்டின் முன்பும், பின்புறமும் செடிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். திருட்டை தடுக்க எச்சரிக்கை மணியினை பொருத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட ஆலோசனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.

இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

கூட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ,ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராஜசேகரன், துணைத்தலைவர் சிவகாமி ராஜசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 23 Jun 2022 6:49 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  5. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  6. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  7. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  9. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  10. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்