/* */

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் தொழில் நுட்ப கருத்தரங்கு

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகள் பற்றிய கருத்தரங்கு நடந்தது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் தொழில் நுட்ப கருத்தரங்கு
X

அருணை பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் ஆராய்ச்சி செயல்திட்ட கருத்தரங்கு நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் "அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் யுத்திகள்"- நிதியுதவி அளிக்கும் நிறுவனங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது .

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் முனைவர் சீனிவாசன் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு சிறப்பித்தார். துணைத் தலைவர் என்ஜினீயர் குமரன் முன்னிலை வகித்தார். பதிவாளர் முனைவர் ஆர்.சத்தியசீலன் தலைமை வகித்தார். இயக்குனர் முனைவர் ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். முதல்வர் விஜயன் குருமூர்த்தி ஐயர் வாழ்த்துரை வழங்கினார்.

மாணவர்கள் தொழில்நுட்பத் துறைகளில் திட்டப்பணிகள் செய்வதோடு ஆராய்ச்சியிலும் சிறிதளவாவது கவனம் செலுத்த வேண்டும் என்றார். முனைவர் சீனிவாசன். அவர் மேற்கொண்டு பேசுகையில் அருணை கல்லூரியில் ஐபிஆர் எனப்படும் அறிவுசார் காப்புரிமை மையம் ஒன்று அமைத்திட மன்றம் வழிகாட்டும் என்றார்.

மாணவர்களுக்கும் கிராமப்புற தொழிலாளர்களுக்கும் திறன் மேம்பாட்டு கருத்தரங்குகள் நடத்தவும் நிதி உதவி அளிக்க ஆவண செய்வதாக கூறினார்.

ஆசிரியர்களும் மாணவர்களும் கூட்டாக சமுதாயத்திற்கு பயனுள்ள திட்டப்பணிகள் மேற்கொண்டால் மன்றம் பலவகைகளில் துணை புரியும் என்றார். கொடைக்கானல் மணிபூண்டு , திண்டுக்கல் பூட்டு போன்ற புவிசார் குறியீடு அடையாளங்கள் பாதுகாக்கும் திட்டப்பணிகள் வரவேற்கப்படும் என்றார்.

வரும் காலத்தில் பல கருத்தரங்குகள், திட்டப்பணிகள் அருணை பொறியியல் கல்லூரிகளில் நடத்த தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்பம் மன்றம் மிகவும் உறுதுணையாக இருப்பதோடு ஊக்குவிக்கவும் செய்யும் என்று உறுதி அளித்தார் . விழாவை ஆட்டோமொபைல் துறைத்தலைவர் ஏகாம்பரம் ஒருங்கிணைத்தார்.

உயிரி தொழில்நுட்பத் துறைத்தலைவர் பேராசிரியர் பிரவீன் குமார் நன்றியுரை வழங்கினார்.

Updated On: 14 April 2022 7:12 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. வந்தவாசி
    மது போதையில் ரகளை செய்த மகன்; கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ‘ பாசக்கார’...
  6. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  7. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  8. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  10. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...