/* */

திருவண்ணாமலையில் இ-பைலிங் நடைமுறையை தள்ளி வைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறையை தள்ளி வைக்கக் கோரி, திருவண்ணாமலையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் இ-பைலிங் நடைமுறையை  தள்ளி வைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.

நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறையை தள்ளி வைக்கக் கோரி, திருவண்ணாமலையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே, மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திருவண்ணாமலை பாா் அசோசியேஷன் தலைவா் நாக.குமாா் தலைமை வகித்தாா்.

லாயா் அசோசியேஷன் துணைத் தலைவா் பாபு, அட்வகேட் அசோசியேஷன் செயலா் காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழக நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதை தள்ளி வைக்க வேண்டும்.

இ-பைலிங் நடைமுறையை 6 மாதங்களுக்கு தள்ளிவைக்கக் கோரி மனு அளித்தும், பேரணி நடத்தியும் பயனில்லை. எனவே, நடைமுறை கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் வரை இந்தத் திட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மூத்த வழக்குரைஞா்கள் , உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பலா் கலந்து கொண்டனா்.

தையல் கலை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் தையல் கலை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட தையல் கலை தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் மேரி தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட சமூல நலத்துறையில் விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் உடனடியாக தையல் எந்திரம் வழங்க வேண்டும். திருவண்ணாமலை தையல் மகளிர் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கத்திலும், வந்தவாசி அன்னை சத்யா மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்திலும் புதிய உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும்.

மகளிர் தையல் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு வருடந்தோறும் 5 சதவீதம் கூலி உயர்வு, சிக்கன சேமிப்புக்கு வட்டி, இலவச மின்சாரம், இலவச தையல் எந்திரம் போன்றவை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட தையல் கலை தொழிலாளர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Oct 2023 2:19 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!