/* */

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகள் நூதன போராட்டம்

திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகள் நூதன போராட்டம்
X

கைகளில் இலை, தழைகள், மரக்கன்றுகளை கையில் ஏந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகள்

திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள தேவனந்தல் ஊராட்சியில் புனல்காடு அருகில் உள்ள மலையை ஒட்டிய இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12-ம் தேதி முதல் புனல்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பை கிடங்கும் அமைக்கும் இடத்தின் அருகில் சாலையோரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு கம்யூனிஸ்டு கட்சியினர், தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் பொதுமக்கள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு நூதனமான முறையில் கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பெண்கள் சிலர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற இடத்தில் அருகில் உள்ள காஞ்சி சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகள் நூதன போராட்டம் நடத்தினர்.

மலையடிவாரத்தில் இயற்கை சூழல் பாதிக்கப்படுவதை எடுத்துரைக்கும் வகையில் அப்பகுதி கிராம மக்களுடன் சேர்ந்து குழந்தைகள் கைகளில் இலை, தழைகள், மரக்கன்றுகளை கையில் ஏந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகிகள் வெங்கடேசன், பலராமன், வழக்குரைஞா் அபிராமன், விவசாய சங்க நிா்வாகிகள் உதயகுமாா், சாமிக்கண்ணு, புனல்காடு செல்வம், முருகையன் , கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் , விவசாய சங்க உறுப்பினர்கள் புனல் காடு கிராம மக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 23 May 2023 1:20 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  7. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  8. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  9. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  10. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்