/* */

திருவண்ணாமலையில் நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
X

பைல் படம்

திருவண்ணாமலையில் நாளை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மாவட்டம் தோறும் மாதம் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நாளை நடத்துகிறது.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நாளை (வெள்ளிக்கிழமை) நடத்துகிறது. தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் இந்த வேலை வாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 250-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் 4 புகைப்படம், ரேஷன் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.

முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேவைாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்

Updated On: 10 Aug 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!