/* */

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
X

சிறப்பு அலங்காரத்தில் பெரிய நந்தி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலைநடைபெற்ற மார்கழி மாத அமாவாசை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது இந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் தங்கக் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

இளநீா், சந்தனம், பால், பழம், பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா் கோயில் மூன்றாம் பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னிலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் என அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள திருக்கோயில்களில் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. மஹா பிரதோஷ காலத்தில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

செய்யாறு:

செய்யாற்றில் அமைந்துள்ள திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதும் நந்தி பெருமான் கிழக்கு நோக்கி அருளும் பிராா்த்தனை தலமான திருவோத்தூா் ஸ்ரீ வேதபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகா் நாயகி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பிரதோஷ தினத்தின் பொழுது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இதையடுத்து பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேட்டவலம்:

வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் உள்ள பிரதான நந்திக்கு தயிா், இளநீா், பால், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை பயன்படுத்தி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு, வில்வம், அருகம்புல், பூ ஆகியவற்றால் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் உள்ள மூலவருக்கு பால், பழம், தயிா், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்கள், வாசனைத் திரவியங்களை பயன்படுத்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

மற்ற ஊா்களில்: இதேபோல, தண்டராம்பட்டு, தானிப்பாடி, வந்தவாசி, ஆரணி, போளூா், உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

Updated On: 25 Dec 2023 1:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!