/* */

திருவண்ணாமலையில் 6 இடங்களில் போலீஸ் கண்காணிப்பு கோபுரங்கள்

திருவண்ணாமலையில் 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் 6 இடங்களில் போலீஸ்  கண்காணிப்பு கோபுரங்கள்
X
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் எஸ்.பி. கார்த்திகேயன்.

திருவண்ணாமலையில் 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளி பொருட்கள் வாங்க வரும்போது கடைவீதிகளில் கூட்டநெரிசலை ஒழுங்குபடுத்தவும், குற்ற செயல்களில் ஈடுபடுவோரை உடனுக்குடன் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்யவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் திருவண்ணாமலையில் 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடைகள், பலகாரங்கள் தயாரிக்க தேவையான பொருட்கள், ஆடை அணிகலன்கள் வாங்க குவிந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு திருவண்ணாமலைக்கு வருகை தருவர்.திருவண்ணாமலை மாடவீதி சுற்றி முக்கிய கடைகள் அமைந்துள்ளதால் அப்பகுதியில் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

தொடர் விடுமுறை தினம் என்பதால் அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் மிக அதிக அளவில் உள்ளது. தெருக்களில் திடீரென முளைத்துள்ள கடைகளில் ஆயத்த ஆடைகள் குவிக்கப்பட்டுள்ளன. இவற்றை வாங்கவும் பலகாரங்கள் தயாரிக்க தேவையான மளிகை பொருட்கள் வாங்கவும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் குவிந்து வருகின்றனர். விலை உயர்வு இருந்தாலும் பண்டிகையை கொண்டாட ஆவலுடன் அவர்கள் குவிந்து வருகின்றனர்.

மேலும் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு, பணம்பறிப்பு, நகை பறிப்பு போன்றவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்கவும், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும் திருவண்ணாமலை பஜார் பகுதியில் டவுன் டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலையின் முக்கிய கடை வீதிகளான சின்னக்கடை தெரு, தேரடி வீதி, கடலைக்கடை மூலை சந்திப்பு, திருமஞ்சன கோபுர வீதி ஆகிய பகுதியில் 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் போலீசார் தொடர்ந்து பைனாகுலர் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் கடை வீதிகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்கள் உடமைகள் மற்றும் நகைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் தீபாவளிக்கு துணி மணிகள் எடுக்க வரும் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படியும், குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்லும் படியும் போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாராவது செயின் உள்ளிட்ட பொருட்களை திருட முயன்றால் உடனடியாக அருகில் உள்ள காவல் உதவி மையங்கள் அல்லது காவல் நிலையங்களில் புகார் செய்யும்படியும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Updated On: 22 Oct 2022 7:02 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...