/* */

திருவண்ணாமலை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள்: கூடுதல் கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை ஒன்றியத்தில்  வளர்ச்சி பணிகள்: கூடுதல் கலெக்டர் ஆய்வு
X

திருவண்ணாமலை ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கிக்கால், ஆடையூர், அடிஅண்ணாமலை, மேலத்திகான் மற்றும் சோ.நாச்சிப்பட்டு ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கூடுதல் கலெக்டர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலத்திக்கான் ஊராட்சியில், தனி நபர் உறிஞ்சு குழி பணிகள், நூலகம் புதுப்பித்தல், வேங்கிக்கால் ஊராட்சியில் ஜல்லி சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தராஜ், லட்சுமி, உதவி பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனிருந்தனர்.

அவர்களுக்கு கூடுதல் கலெக்டர் பிரதாப், பல்வேறு அறிவுரைகளை வழங்கி பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார். முடிவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து ஊராட்சி செயலாளர்களுக்கும், அனைத்து கள அலுவலர்களுக்கும் ஆய்வுக்கூட்டம் நடத்தி பொது மக்களுக்கான வீடுகள் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார்.

Updated On: 25 Feb 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!