/* */

திருவண்ணாமலையில் ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் முருகேஷ் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு கண்காட்சி
X

ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு கண்காட்சி கலெக்டர் துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் பாரம்பரிய உணவு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு போட்டியினை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பார்வையிட்டு துவக்கி வைத்தார்.

பின்னர் அவர்கள் தயாரித்த பாரம்பரியமிக்க உணவு வகைகளை ருசித்துப் பார்த்து எவ்வாறு இதனை தயாரித்தார்கள் என்று செய்முறை பற்றி சுய உதவி குழு உறுப்பினர்களிடம் கேட்டறிந்தார்.

முன்னோர்கள் கடைபிடித்த உணவு பழக்க வழக்கங்கள் மிகவும் ஆரோக்கியமானது. முன்னோர்கள் ஊட்டச்சத்தான உணவு வகைகள் சிறுதானியங்கள் பலவகை உணவு வகைகளை தங்களுடைய நிலங்களில் விளைவித்து மேலும் நிலங்களுக்கு இயற்கை முறையில் சத்துக்களை வழங்கும் உணவு பொருட்களை உற்பத்தி செய்து அவற்றை உண்டு வாழ்ந்தனர்.

ஊட்டச்சத்து உணவை உட்கொள்ளும்போது சரிவிகித சத்துக்கள் தாய்க்கும் சேய்க்கும் கிடைத்து பிரசவத்தின் போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதற்கு ஊட்டச்சத்து உணவுகள் மிகவும் இன்றியமையாதது.

அதேபோல் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வெப்ப காலங்களில் குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்த்து மோர் ,இளநீர் போன்ற இயற்கை பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் கட்டா ரவி தேஜா, சமூக நலத்துறை அலுவலர்கள் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 6 March 2022 6:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...