/* */

நகையை ஏலம் விட்ட தேசிய வங்கி: இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு

Consumer Court Order நகையை ஏலம் விட்ட தேசிய வங்கி நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவு.

HIGHLIGHTS

நகையை ஏலம் விட்ட தேசிய வங்கி: இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு
X

திருவண்ணாமலை நீதிமன்றம் (பைல் படம்).

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த அணியாலையைச் சேர்ந்த விவசாயி பரந்தாமன், போளூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், 56 கிராம் நகையை அடமானம் வைத்து, 77 ஆயிரத்து, 700 ரூபாய் கடன் பெற்றார். இவர் 2019 மார்ச், 12ல் நகையை திரும்ப பெற, வட்டி மற்றும் அசல் தொகை செலுத்தினார். அப்போது, வங்கி ஊழியர்கள், உயர் அதிகாரி விடுமுறையில் சென்றதால், வேறொரு நாளில் வருமாறு தெரிவித்தனர். பத்து நாட்கள் கழித்து நகையை கேட்டபோது, பதில் கூறவில்லை.

Consumer Court Order

இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில், பரந்தாமன் விளக்கம் கேட்டபோது, அடகு வைக்கப்பட்ட அவருடைய நகை, ஏலம் விடப்பட்டது தெரிய வந்தது. திருவண்ணாமலை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அடகு வைத்த நகைக்கு ஈடாக, 2 லட்சத்து, 66 ஆயிரம் ரூபாய், பரந்தாமனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு, 25 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு 5,000 ரூபாய் ஆகியவற்றை, ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில், மேற்குறிப்பிட்ட தொகைக்கு உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து, 6 சதவீதம் வட்டி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Updated On: 31 May 2022 5:57 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  9. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  10. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...