/* */

தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு நடமாடும் விழிப்புணர்வு வாகனம்

World Breastfeeding Week- தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு நடமாடும் விழிப்புணர்வு வாகனம்
X

உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

World Breastfeeding Week- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். அப்போது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து சிறப்பு நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முன்னதாக கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளர்இளம் பெண்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து தொடர்பான கண்காட்சி, தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு வரையப்பட்டிருந்த விழிப்புணர்வு வண்ண கோலங்களையும் அவர் பார்வையிட்டார். தாய்ப்பால் வார விழிப்புணர்வு உறுதி மொழியினை கலெக்டர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், மகளிரும் குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தாய்க்கும் சேய்க்கும் பல நல திட்டங்களை செயல் படுத்தி மக்கள் நலனில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

இந்த ஆண்டு குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிய ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற சிறப்பு திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்கள்.

ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து தற்போது பொது மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல் தற்போது தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாய்ப்பால் வார விழா நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகளுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் உள்ளதால் தாய்ப்பாலின் மகிமையை உணர்ந்து தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய் பாலை ஊட்ட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இந்த விழிப்புணர்வு வாயிலாக தெரிவித்தார்.

தாய்ப்பால் விழிப்புணர்வு வாகனம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) கந்தன், மாவட்ட சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் மீனாம்பிகை, வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், வினோத்குமார், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், மாவட்ட மற்றும் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், திட்ட உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Aug 2022 7:25 AM GMT

Related News