/* */

"மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைப்பு
X

கலசபாக்கம் தொகுதி வாய்விடாதாங்கல் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலசபாக்கம் தொகுதி வாய்விடாதாங்கல் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்குப்பின் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, புதுப்பாளையம் வட்டாரத்தில் 10080 பேர் இத்திட்டத்தில் பயனடைய உள்ளனர். இவர்களில் நீரிழிவு நோய் 3313 ரத்த அழுத்தம் 4420 இரண்டு நோய்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் 2345 என மொத்தம் 10080 நபர்கள் பயனடைய உள்ளனர்.

மேலும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு வெளியில் வர இயலாத மக்கள் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது மக்களை தேடி மருத்துவம் திட்டம், நீரிழிவு நோய், இரத்த அழுத்த இயன்முறை சிகிச்சை மற்றும் நோய் ஆற்றுதல் சிகிச்சை ஆகியவற்றை கொண்டதாகும்.

கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் பொது போக்குவரத்து முடங்கியதால் அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருந்துகளை வாங்க முடியவில்லை. இதனால் இவர்களின் நீரிழிவு ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனதால் அதன் விளைவாக கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 60% பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொது மக்களின் பிரச்சனைகளைப் போக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தற்போது மருத்துவமனைகளில் நீரிழிவு ரத்த அழுத்தம் மற்றும் மருந்து வாங்கி சாப்பிடும் மக்களின் வீடு தேடி சென்று மருந்து மாத்திரைகளை வழங்கப்பட உள்ளது. இதனால் அரசு மருத்துவமனைக்கு வர இயலாத 45 வயதுக்கு மேற்பட்ட ஏழை எளிய மக்கள் மலைவாழ் மக்கள் இதுநாள் வரை தனியார் மருத்துவர்கள் மருந்து வாங்கி சாப்பிட்டு வந்த நிலையில் அவர்களுக்கு இன்னல்கள் ஏற்படுத்தாத வகையில் அவர்களது இல்லத்துக்கே சென்று மருந்து மாத்திரை வழங்கப்படுகிறது. இதனால் இத்திட்டத்தில் பல ஏழை எளிய மக்கள் பயன்பெறுகின்றனர்.

இதுமட்டுமின்றி முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு தேடி சென்று பிசியோதெரபி செய்யப்படுகிறது. மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படும். அவர்கள் பிரச்சனையை கேட்டு அறிந்து ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்கு தேவையான இலவச மருந்து மாத்திரைகள் மொத்தமாக வழங்கப்படும்.

வீடு தேடி சிகிச்சை வரும் வாகனத்தில் இயன்முறை மருத்துவர் செவிலியர் மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட உடன் இருப்பார்கள் எனவும் பொதுமக்களுக்காக பயன்படுத்த உள்ள ரத்த அழுத்த மானியம் மற்றும் குளுக்கோ மீட்டர் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ள மருத்துவ பெட்டிகள் முதலுதவி பெட்டகம் சீருடையுடன் கூடிய அடையாள அட்டை அணிந்து பயனாளிகள் வந்து சிகிச்சை அளிப்பார்கள் தெரிவிக்கப்பட்டது.

எந்த சேவையையும் மக்கள் தேடி வந்து பெற்றுக்கொள்ளும் நிலை இருந்து வந்ததை மாற்றி தற்போது மக்களை தேடிச் சென்று சேவை செய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் சிறப்பான இந்த திட்டத்தை பொதுமக்கள் அதிக பயன் அடைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ், வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி, அம்பேத்குமார், ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Aug 2021 12:27 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்