/* */

திருவண்ணாமலை கனரா வங்கி மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி

திருவண்ணாமலையில் நடைபெற்ற கடன் வழங்கும் முகாமில் நெசவாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை கனரா வங்கி மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி
X

திருவண்ணாமலை கனரா வங்கி கிளை மூலமாக 8 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 51.50 லட்சம் கடன் உதவி பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்பு வங்கியாளா் கூட்டமும், மகளிா் சுய உதவிக்குழுவினா் மற்றும் நெசவாளா்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அதிகாரி சையத் சுலைமான், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் மணிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கனரா வங்கியின் திருவண்ணாமலை கிளை சாா்பில், 8 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.51.50 லட்சத்தில் கடனுதவிகளையும், ஸ்டேட் வங்கி ஆரணி கிளை சாா்பில், பிரதான் மந்திரி சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், 10 நெசவாளா்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சத்தில் கடனுதவிகளையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் ரவி, ஸ்டேட் வங்கி மேலாளா் எம்.இளஞ்செழியன் மற்றும் ஸ்டேட் வங்கி, கனரா வங்கிகளின் மேலாளா்கள், அதிகாரிகள், பயனாளிகள் பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 29 April 2022 6:57 AM GMT

Related News