/* */

கூத்து கலைஞர்கள் நடத்திய விழிப்புணர்வு நாடகம்

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நாடகத்தை நடத்திய கூத்து கலைஞர்கள்

HIGHLIGHTS

கூத்து கலைஞர்கள் நடத்திய விழிப்புணர்வு நாடகம்
X

மாவட்ட கலெக்டர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தெருக்கூத்து கலைஞர்கள்

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்காளா்களையும் விடுபடாமல் வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக மாவட்ட நிா்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், வேளாண்மை துறை மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் தேர்தல் அன்று தவறாமல் வாக்களிக்க வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கியும், விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும், வாக்காளர் வாக்காளர் உறுதிமொழி ஏற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் பேரூராட்சியில் பாராளுமன்ற பொது தேர்தல்-2024 முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமிய கூத்து கலைஞர்கள் நடத்திய விழிப்புணர்வு நாடகத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்.

தொடர்ந்து அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், சுமைத்துக்கும் தொழிலாளர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், முதல் முறை வாக்காளர்கள், பொதுமக்கள் ஆகியோர்களுக்கு விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பாஸ்கர பாண்டியன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் ஸ்ரீ விஜயசாந்தி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்கு மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பணி சார்ந்த அலுவலர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சியில் ராஜா நந்திவர்மன் கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வட்டாட்சியர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை, கல்லூரி தலைவர் முத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த், துணை முதல்வர் காந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 14 April 2024 1:51 AM GMT

Related News