/* */

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம், அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வருமாம்.

HIGHLIGHTS

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
X

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று அக்ஷய திரிதியா. இந்த நாள் பல்வேறு புனிதமான செயல்களைச் செய்ய மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது.

தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் மூன்றாவது நாளில் அக்ஷய திருதியை கொண்டாடப்படுகிறது.

“ஷயம்’’ என்றால் குறைவு. “அட்ஷயம்’’ என்றால் குறைவில்லாது.

புராணங்கள் மற்றும் பண்டைய வரலாற்றின் படி, இந்த நாள் பல முக்கியமான சம்பவங்களைக் குறிக்கிறது.

விநாயகப் பெருமானும் வேத வியாசரும் இதிகாசமான மகாபாரதத்தை விநாயகப் பெருமானும் வேத வியாசரும் இதிகாசமான மகாபாரதத்தை இந்த நாளில்தான் எழுதினார்கள்.

இந்த நாள் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் அன்னபூரணி தேவி பிறந்தாள்.

இந்த நாளில், கிருஷ்ணர் தனது உதவிக்காக வந்த தனது ஏழை நண்பரான சுதாமாவுக்கு செல்வத்தையும் பண ஆதாயங்களையும் வழங்கினார்.

மகாபாரதத்தின்படி, இந்த நாளில் கிருஷ்ணர் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது அவர்களுக்கு 'அக்ஷய பாத்திரத்தை' வழங்கினார். அவர்களை ஒருபோதும் பசியடையச் செய்யாத வரம்பற்ற அளவிலான உணவைத் தொடர்ந்து உற்பத்தி செய்யும் இந்தக் கிண்ணத்தை அவர்களுக்கு அருளினார்.

இந்த நாளில் கங்கை நதி வானத்திலிருந்து பூமியில் இறங்கியது.

இந்த நாளில்தான் குபேரர் லட்சுமி தேவியை வழிபட்டார், இதனால் கடவுளின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது.

சமண மதத்தில் இந்த நாள் அவர்களின் முதல் கடவுளான ஆதிநாதரை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

விஷ்ணு பக்தர்கள் இந்நாளில் விரதம் இருந்து கடவுளை வழிபடுகின்றனர். பின்னர், ஏழைகளுக்கு அரிசி, உப்பு, நெய், காய்கறிகள், பழங்கள், ஆடைகள் வழங்கி தொண்டு செய்யப்படுகிறது.

எதை வாங்க வேண்டும்? எதைத் தர வேண்டும்?

தானம் செய்ய வேண்டும்.

தவம் (வழிபாடு) செய்ய வேண்டும்.

அட்சய திருதியை அன்று அதிகாலையான பிரம்ம முகூர்த்தத்தில் நாம் பூஜை செய்தாலே அதிக பலன் கிடைக்கும்.

வீட்டு வாசலில் கோலம் போட்டு விளக்குகளை வைத்து மாவிலைத் தோரணம் கட்டி, வழிபாடுகள் செய்ய வேண்டும்.

அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.

பசு மாடு போன்ற விலங்குகளுக்கு ஏதேனும் உணவு கொடுக்க வேண்டும்.

பறவைகளுக்கு நீர் வைக்க வேண்டும் தானியங்கள் போட வேண்டும்.

பசி என்று வந்தவருக்கு ஒரு வாய் சோறு போட வேண்டும்.

உடைகள் இல்லாதவர்களுக்கு அன்று புத்தாடைகள் வாங்கி தானம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம். இவைகள் எல்லாம் நாம் கொடுப்பதன் மூலமாக வளரும்.

இதை மட்டும் செய்ய வேண்டாம்

பொதுவாக அட்சய திருதியை நாம் எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் ஒன்று பத்தாக நமக்கே திரும்பி வரும் என்பதுதான் அட்சயதிருதியை. மறுபடியும் சொல்லுகின்றேன். அட்ஷய திருதியை அன்று எது நன்மையோ, எது தருமமோ, எது புண்ணியமோ அதை மட்டும் செய்யுங்கள். ஒரு நண்பர் தங்கம் வாங்கினால் நல்லது என்று நினைத்தார். காசு இல்லை. வட்டிக்குக் கடன் வாங்கி தங்கம் வாங்கினார். சிறிது காலம் கழித்து வாங்கிய தங்கத்தை விற்றுவிட்டார். நஷ்டம்.

“அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினேன். வளரவில்லையே” என்றார். நான் சொன்னேன்.

“தங்கம் வாங்குவதற்கு எதை வாங்கினீர்கள்?” “கடன் வாங்கினேன்.”

“முதலில் அட்சய திருதியை அன்று வாங்கிய கடன் வளர்ந்துவிட்டது” என்றேன்.

தயவுசெய்து கடன் வாங்கி தங்கம் வாங்காதீர்கள். கடன் வளர்ந்து விடும்.

அட்சய திருதியை அன்று எப்படியாவது பல்லியை பார்த்து விடுங்கள்.! ஏன் தெரியுமா.?

இந்நாளில் வீட்டில் உள்ள பல்லியை பார்த்தால் பல்வேறு நன்மைகள் நடக்குமாம். எனவே, இப்பதிவின் வாயிலாக அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏழு ஜென்மங்கள் பாவங்கள் அனைத்தும் விலகி பிடித்த தரித்திரம் அனைத்தும் விலகி விடும்.

அட்சய திருதியை நாளில் வீட்டிலுள்ள பல்லிகள் அனைத்தும் யார் கண்ணிலும் தென்படாமல் இருக்க வேண்டும் என்பது வாஸ்து பகவான் கட்டளையிட்ட நாளாகவும் கூறுவார்கள். ஒரு சிலர் பல்லியை வழிபடவும் செய்வார்கள். இந்த அட்சய திருதியை நாளில் பல்லியை கண்டு விட்டால் எல்லா பீடைகளும் நீங்கி, திரிஜென்மம் பாவமும் நீக்கப்பெற்று அனைத்து செல்வங்களும் பெற்று லட்சமி கடாஷத்துடன் வாழ்வர் என்று நம்பப்படுகிறது. மற்ற நாட்களில் நம் வீட்டில் பல்லிகள் அதிகமாக இருக்கும். ஆனால், அட்சய திருதியை நாளில் மட்டும் பல்லிகள் நம் கண்ணிலே தென்படாதாம். வாஸ்து பகவானின் கட்டளைக்கிணங்க அட்சய திருதியை அன்று மட்டும் எல்லா பல்லிகளும் கண்ணுக்குத் தெரியாத ஒரு இடத்தில் போய் ஒளிந்து கொண்டிருக்குமாம். எனவே, எல்லாவிதமான துன்பங்களும் நீங்கி சகல செல்வ வளமும் பெற வேண்டுமென்றால் எப்படியாவது அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்து விடுங்கள்.

Updated On: 10 May 2024 1:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  3. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  7. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்
  8. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  10. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!