/* */

இதழியலாளர்கள் "கலைஞர் எழுதுகோல்" விருதுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுகோள்

இதழியலாளர்களிடம் இருந்து “கலைஞர் எழுதுகோல்” விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

இதழியலாளர்கள் கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுகோள்
X

திருவண்ணாமலை  மாவட்ட கலெக்டர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி ஒரு சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கிக் கவுரவிக்கப்படும் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 2021-ம் ஆண்டுக்கான இவ்விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இவ்விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த விருதுக்கான விண்ணப் பதாரர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணிபுரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

பத்திரிகை பணியை முழுநேரப் பணியாக கொண்டிருக்க வேண்டும்.இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றி இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் எழுத்துக்கள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொரு வரின் பரிந்துரையின் அடிப்படையிலோ, பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையிலோ விண்ணப் பங்களை அனுப்பலாம்.

இதற்காக அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

தகுதி கொண்ட விண்ணப்பங்கள் விரிவான விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் இயக்குனர், செய்தி மக்கள் தொடர்பு துறை, தலைமைச் செயலகம், சென்னை -600009 என்ற முகவரிக்கு வருகிற 30.4.2002 &க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 8 April 2022 12:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...