/* */

வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை: எ.வா.வேலு குற்றச்சாட்டு

எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் வருமானவரித்துறை அதிகாரிகள் தேர்தல் நேரத்தில் சோதனையில் ஈடுபட்டது, என்னுடைய தேர்தல் பணியை இரண்டு நாட்கள் முடக்கியுள்ளது எ.வா.வேலு குற்றச்சாட்டு.

HIGHLIGHTS

வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை: எ.வா.வேலு குற்றச்சாட்டு
X

திமுக முன்னாள் அமைச்சர் எ.வா.வேலுவின் கல்லூரிகள் மற்றும் அவரது வீடுகள் உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல இடங்களில் மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

2021 சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பணம் வைத்திருக்கலாம் என்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காலை 11 மணி முதல் சுமார் 28 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் திமுகவின் முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தொகுதி வேட்பாளருமான எ.வா வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் வருமானத் துறை அதிகாரிகள் ராஜமனோகரன் தலைமையில் 110 அலுவலர்கள் தனக்கு சம்பந்தப்பட்ட 10 இடங்களில் 28 மணி நேரம் சோதனை நடத்தினர்.

30 ஆண்டுகளுக்கு மேலாக அறக்கட்டளைகளின் மூலம் கல்லூரிகள் நடத்தி வருவதாகவும். சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தலில் நிலைதான் சந்தித்திருக்கிறார்கள் அப்போதெல்லாம் வராத இந்த வருமானத் துறை அதிகாரிகள் சோதனை தற்போது திருவண்ணாமலையில் நின்றுள்ள பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வெற்றி பெற வைக்கவேண்டும் என்ற நோக்கில் இந்த சோதனை நடைபெற்றிருப்பதாகவும், எனது தேர்தல் பணியை முடிக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த வருமான வரி சோதனை

இந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது. சோதனையில் எனக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ 3.50 கோடி கைப்பற்றியதாக செய்தி தவறானது என்றும் உடனடியாக நான் மறுப்பு தெரிவித்துள்ளேன். அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஒரு பைசா கூட அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. இல்லாத ஒன்றை கைப்பற்றியதாக சொல்வது உள்நோக்கத்துடன் உள்ளது. இந்த சோதனை நடத்தப்பட்டதால் என்னுடைய வெற்றி வாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்காது மேலும் என்னுடைய வெற்றி வாய்ப்பு கூடியிருக்கிறது என்று கூறினார்.

Updated On: 27 March 2021 6:41 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்