/* */

அருணாசலேஸ்வரா் கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அருணாசலேஸ்வரா் கோயிலில் இசையமைப்பாளா் இளையராஜா சுவாமி தரிசனம் செய்தாா்.

HIGHLIGHTS

அருணாசலேஸ்வரா் கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்
X

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இசை அமைப்பாளர் இளையராஜா

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த நிலையில், ஆங்கில் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா நேற்று (ஜனவரி 1) அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, கோயில் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும், இளையராஜாவின், ரசிகர்கள் மற்றும் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு கொண்டு அவருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு அவருக்கு புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

ஆங்கில புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோல, தேவாலயங்களிலும் புத்தாண்டு பிறப்பு சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டன.

வந்தவாசி பகுதியில் ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு நகரின் பல தெருக்களில் அப்பகுதி இளைஞா்கள் மின்விளக்கு தோரணங்களை கட்டி புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்றனா்.

மேலும், நேற்று தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, வந்தவாசி நல்லூரில் உள்ள ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

ஆரணி அருகே இரும்பேடு பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன, மேலும் வெங்கடாஜலபதி பெருமாள் வெள்ளிக்கவசம் அணிவித்தும், பூக்களால் மற்றும் துளசி பூமாலையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 4 Jan 2024 4:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  2. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  3. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  4. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  5. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  6. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  9. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...