/* */

திருவண்ணாமலை கிரிவலம் வர விதிக்கப்பட்ட விதிமுறைகள் தெரியுமா?

திருவண்ணாமலை கிரிவல சிறப்புகள், மலைச்சுற்ற விதிக்கப்பட்ட விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்

HIGHLIGHTS

திருவண்ணாமலை கிரிவலம் வர விதிக்கப்பட்ட விதிமுறைகள் தெரியுமா?
X

அண்ணாமலையார் கோவில் - கோப்புப்படம்

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.

அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

வாழ்நாளில் ஒருமுறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வேண்டியது அனைத்தையும் இறைவன் நிறைவேற்றி தருவார். வறுமையின் பிடியில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் மிக உயர்ந்து நிலைக்கு செல்ல முடியும். ஞானம், செல்வம், வாழ்க்கை என அனைத்திலும் உயர்வை தரக்கூடியது கிரிவலம். அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்தி கிரிவலத்திற்கு உண்டு.

மலைவல சிறப்புகள்,மலைச்சுற்ற விதிக்கப்பட்ட விதிமுறைகள்

திருவண்ணாமலை திருத்தலம் உலகத்திற்கே ஒரு பக்தி மார்க்கத்தை வழங்கி உள்ளது. அதுதான் கிரிவலம் வருதல், இதனை கிரி பிரதட்சணம் மற்றும் மலை சுற்றுதல் என்றும் பக்தர்கள் பலவிதமாக சொல்வார்கள் . எத்தனையோ தலங்களில் மலை சுற்றுகிறார்கள்,

அங்கு எல்லாம் மலை மேல் இறைவன் இருப்பார், ஆனால் மலையே இறைவன் என்பது இந்த திருவண்ணாமலை தான்.

ஆம், திருவண்ணாமலை மலை ஒரு சுயம்பு லிங்கம், அடி முடி தேடிய திருமாலும் நான்முகனும் கர்வ போரில் தோற்க சிவன் வெகுண்டு சிவந்த ஜோதியாய் எழுந்தருளிய திருத்தலம் திருவண்ணாமலை திருத்தலமாகும்.

அந்த ஜோதி அக்னி ரூபம் குளிர்ந்து மலையானது அதுவே இந்த சிவந்த சிவலிங்க மலை ஜோதிமலை அருணாச்சல மலை, ஆகும்.

திருவண்ணாமலை கிரிவல விதிமுறைகளைப் பற்றி “சைவத்தின் தலைநகரம் திருவண்ணாமலை” , என்ற ஆன்மீக புத்தகத்தில் கவிஞர் ஏ.டி.எம்.பன்னீர்செல்வம், பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்கள்.

எதையும் வலம் வந்து வணங்குதல் நமது சமய சடங்குகளில் ஒன்று அது. போல தான் இந்த மலையை வலம் வந்து வணங்குதல் நம் முன்னோர் ஏற்படுத்திய பக்தி வழியாகும்.

இந்த மலை வலத்திற்கு விதிமுறைகளை முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள்.

  • மலை சுற்றும் பக்தர்கள் நீராடி விட்டு திருநீறு அணிந்து தான் மலை வலம் செய்ய தொடங்க வேண்டும், இந்த மலையை சுற்றுவதற்கு அகத்தூய்மையும் அவசியம் தேவை
  • அண்ணாமலையாரை வணங்கி அண்ணாமலைக்கு அரோகரா ஓம் நமசிவய என சொல்லிக் கொண்டே என சொல்லிக் கொண்டே மலைச்சுற்றினால் நல்லது.
  • மலை சுற்றுவோர் காலில் மிதியடி அணிய கூடாது. மழை வெயில் ஆகியவற்றிற்கு அஞ்சி கொடை பிடித்து செல்லக்கூடாது, போர்வை போர்த்தக்கூடாது.
  • மலையை எவ்விதமான வாகனங்களிலும் சுற்றவே கூடாது
  • மலை சுற்றுவோர் எவரும் லாகிரி வஸ்துகளை உபயோகிக்க கூடாது . மலை சுற்றும் போதாவது அதை நாம் தவிர்ப்பது நலம்,
  • மலையை இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும், அப் பிரதட்சணமாக சுற்றவே கூடாது.
  • மலை சுற்றுவதை பாதி வழியில் தொடங்கவோ பாதி வழியில் முடிக்கவும் கூடாது என்பது முக்கியமான விஷயமாகும்

உஷ்ண காற்று

மலை சுற்றும் பகுதியில் சோனை நதி அருகே உள்ள தோப்பில் அடர்ந்த மரங்களுக்கு இடையில் இருந்து ஒரு உஷ்ணக்காற்று வீசும், நள்ளிரவில் அதிகாலையில் மழைக்காலங்களில் குளிர்காலங்களில் மலை சுற்றும் பக்தர்கள் இந்த உஷ்ண காற்றை அனுபவிக்க முடியும் அனுபவித்து இருப்பார்கள், இந்த உஷ்ண காற்றை அனுபவித்து ஆஸ்துமா நோயை தீர்த்துக் கொண்டவர்களும் நிறைய பேர் உண்டு.

திருவண்ணாமலை ருத்ர பூமி இறைவனை நம்பி மலை சுற்ற செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் தற்காப்புக் கென ஆயுதங்களை எடுத்துச் செல்வது கிடையாது .

மலை சுற்றுபவர்களின் காவல் தெய்வம் நந்தியம் பெரு மான். கிரிவலம் செல்லும் பாதையில் மலையைப் பார்த்தபடி பல இடங்களில் வீற்றிருக்கிறார் நந்தி தேவர்.

இவருக்கு அதிகார நந்தி என்ற பெயரும் உண்டு. மலை சுற்றி வருவோருக்கு எவ்வித இடஞ்சிலும் இல்லாமல் காக்கின்ற பணி இவருடையது, எனவே அவரை வணங்கி கிரிவலம் சென்றால் நிச்சயம் அவர் துணை இருப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மலை சுற்றுவதை அரக்க பரக்க என்பார்களே அப்படி சுற்றாமல் இட்ட அடி நோக என்பது போல ஒரு கர்ப்பிணி பெண் நடப்பதை போல மலை சுற்றி வர வேண்டுமாம்,

கிரிவலம் வரும் பக்தர்கள் நீ நான்கு மணி நேரத்தில் மலை வலம் வந்தாய், நான் மூன்று மணி நேரத்தில் வருகிறேன் என்று போட்டி போட்டுக் கொண்டு கிரிவலம் செல்லக்கூடாது. கிரிவலம் வருவதை ஒரு தியானத்தை போல் நின்று நிதானமாக மேற்கொள்ள வேண்டும்

விரதம் இருந்து மலை வலம் வருவது தான் பண்டைய மரபாக இருந்தது, ஆனால் தற்போது அன்னதானத்தை சாப்பிட்டு விட்டு பாதி அன்னத்தை வீதியில் வீசிவிட்டும் கையை சுத்தப்படுத்தாமலும் வாயை துடைக்காமலும் எச்சில் கையால் வணங்கி வருவது நவீன மரபாக உள்ளது இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயமாகும்

கிரிவலத்தின் போது செல்போனை சைலன்ட் மோடில் வைப்பதே நல்லது, சிலர் பக்தி பாடல்களை கேட்டுக்கொண்டு போவதை புனிதமாக நினைக்கிறார்கள் அது மனதை ஒருநிலைப்படுத்த உதவாது.

கிரிவலம் முடித்தவுடன் குளிக்கவோ தூங்கவோ கூடாது, அது கிரிவல பயனை போக்கும் பாவத்தை சேர்க்கும்

கிரிவலம் முடித்தவுடன் அண்ணாமலையாரை நினைத்து வணங்கி வேண்டி தன்னுடைய வேண்டுதல்களை மானசீகமாக அண்ணாமலையாரிடம் சொல்லி நிறைவு செய்தல் வேண்டும்.

வீட்டிற்கு வந்தவுடன் சிறிது நேரம் அமர்ந்து விட்டு பிறகு நம் பணியை தொடரலாம்

இந்த சுயம்பு மலையை அண்ணாமலையாரை ஆண்டுக்கு இருமுறை கிரிவலம் வருகிறார் என்பதை மறந்து விடக்கூடாது . மேலும் அம்பாள் இடமாகப் பெற கிரிவலம் வந்தால் என்பதையும் , தட்சிணாமூர்த்தியும் ஆண்டுக்கு ஒரு முறை கிரிவலம் வருகிறார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த கிரிவலத்திற்கு ஒரு சிறப்பும் உண்டு ,ஆம் சில கோயில்களில் சில மதத்தவர் நுழையக்கூடாது, சில இனத்தவர் வணங்க கூடாது என்ற தடைகள் எல்லாம் இருக்கிறது, ஆனால் உலகத்திலேயே இந்த மலை வலம் இந்த மலை வழிபாடு மட்டும்தான் பொதுவுடமை , எந்த மதத்தவரும் இனத்தவரும் வணங்கலாம் ,மலை வலம் வரலாம், வந்து கொண்டு தான் உள்ளார்கள்.

பாவம் செய்யாதவர்கள் யார்? புண்ணியம் தேடாதவர்கள் யார்? எல்லாரும் மலை வலம் வருவோம் , அண்ணாமலையாரின் பூர்ண அருளை பெறுவோம்

Updated On: 23 April 2024 1:56 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்