/* */

திருவண்ணாமலையில் தோட்டக்கலை பூங்கா 8-ம் தேதி திறப்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்ட பூங்காவை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் தோட்டக்கலை பூங்கா 8-ம் தேதி திறப்பு
X

பூங்காவை ஆய்வு செய்த ஆட்சியர் முருகேஷ்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட பூங்காவை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைக்க உள்ளதாக அதனை ஆய்வு செய்த ஆட்சியர் முருகேஷ் கூறினார்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை செங்கம் சாலையில் தோட்டக்கலைத் துறை சார்பில் 9 ஏக்கர் பரப்பளவில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 2018- 19 நிதியாண்டில் அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து உள்ளது. இருப்பினும் இந்த பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

இந்த நிலையில் அரசு தோட்டக்கலை பூங்காவை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பூங்காவில் ரூ.1 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் விவரம் மற்றும் என்னென்ன பணிகள் முடிவடைந்துள்ளது என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் முருகேஷ் கூறியதாவது:-

இந்த தோட்டக்கலை பூங்காவை வருகிற 8-ந் தேதி திறந்து வைத்து பொதுமக்கள் பார்வைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இதனை திறந்து வைக்க உள்ளார்கள். எனவே பூங்காவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

திருவண்ணாமலையில் போதிய பொழுதுபோக்கு அம்சம் இல்லாததால் இந்த பூங்கா விரைவில் பயன்பாட்டிற்கு வந்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும். மேலும் பூங்காவில் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் கூடுதலாக அமைக்க வேண்டும்.

பூங்காவை பார்வையிட வருகை தரும் பொதுமக்களிடம் தலா ரூ.20 கட்டணமாக வசூலித்தால் இந்த தோட்டக்கலை பூங்காவை பராமரிக்க ஏதுவாக அமையும். கூடுதல் பணியாளர்களை நியமித்து பூங்காவை அடிக்கடி தூய்மை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை தோட்டக்கலை அலுவலர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அன்பரசு, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, செயற்பொறியாளர் நீலேஸ்வரன், வருவாய்த்துறை , வேளாண்மை துறை அதிகாரிகள் , நகராட்சி அலுவலர்கள் , துப்புரவு மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 3 Aug 2023 2:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!