/* */

ஆனி மாத குருபூர்ணிமா பௌர்ணமி; திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது?

ஆனி மாத பௌர்ணமியொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து, அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஆனி மாத குருபூர்ணிமா  பௌர்ணமி; திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது?
X

அண்ணாமலையார் கோயில்

ஆனி மாத குரு பூர்ணிமா பௌர்ணமியொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மலையே மகேசன் என போற்றப்படும் திரு அண்ணாமலையை பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். அதன்படி ஆனி மாத பௌர்ணமி ஞாயிற்றுக்கிழமை ஜூலை 2 இரவு 7.45 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை ஜூலை மூன்றாம் தேதி மாலை 5.48 மணிக்கு முடிவடைகிறது.

இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஸ்ரீ அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடி

அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து, செல்கின்றனா். எனவே, மாதம்தோறும் கோயில் உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கைப் பணம் எண்ணப்பட்டு வருகிறது.

கோவில் வளாகங்களில் உள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள உபகோவில் உண்டியல்கள் என மொத்தம் 70 உண்டியல்கள் அருணாச லேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டு இணை ஆணையர் முன்னிலையில் காணிக்கை எண்ணப் பட்டது.

அதன்படி, ஜூன் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை முதல் இரவு 10.30 மணி வரை நடைபெற்றது.

கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்ட பத்தில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டன. உண்டியல் காணிக்கையாக

இதில், ரூ.2 கோடியே 9 லட்சத்து 98 ஆயிரத்து 831 ரொக்கம், 476 கிராம் தங்கம், 1,376 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

Updated On: 30 Jun 2023 7:04 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  2. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  4. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  5. ஈரோடு
    சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்...
  6. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    குழந்தைக்கு ஊட்டம்! சரியான உணவுத் திட்டம்!
  8. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  9. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  10. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை